மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

தேநீர் தயாரிக்கும்போது செய்யும் முக்கிய தவறு!

தேநீர் தயாரிக்கும்போது பெரும்பாலானோர் செய்யும் முக்கிய தவறு அதிகம் கொதிக்கவிடுவது

tea cofee

தேநீர் - ANI

Updated On :

காலையில் எழுந்ததும் சூடான ஒரு கோப்பை தேநீருக்கு ஈடுஇணை எதுவும் இல்லை என்று நினைப்பவர்களா நீங்கள்? அப்படியென்றால் சரியான தேநீர் போடுவது எப்படி என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

தேநீர் தூளில் தனின் என்ற ஒரு துவர்ப்புச் சுவை கலந்திருக்கும். தேநீர் போடும்போது, அதிக நேரம் கொதிக்கவைத்துவிட்டால், இந்த துவர்ப்புச் சுவை அதிகமாக கசப்பு வந்துவிடும்.

சரி, கசப்பு சுவைதானே வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்றால் அப்படியில்லை. இந்த கசப்பான தேநீரைக் குடிப்பதால், உணவில் இருக்கும் இரும்புச் சத்துகளை உடல் ஏற்பதை நிறுத்தக்கூடுமாம்.

அதிக தேநீர் தூள் போட்டு அல்லது நன்றாக தேநீர் தூளைக் கொதிக்க வைத்து டீ போடுவது சரியே கிடையாதாம். ஏனென்றால், தேநீரின் ஒரு சிறந்த சுவை மற்றும் அதன் குணத்தை இழந்து, வெறும் அசிடிடி ஏற்படுத்தும் கலவையைத்தான் தேநீர் என்று குடிக்கிறோம் என்கிறார்கள் உணவுத் துறை நிபுணர்கள்.

இவ்வாறு அதிகம் கொதிக்கவைத்த தேநீரைக் குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு அதிகமான இரும்புச் சத்து நிறைந்த உணவை நாம் உட்கொண்டாலும், நமது உடலானது, இரும்புச் சத்தை கிரகித்துக் கொள்ளாதாம். இதனால் தான் பலருக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம்.

எனவே, இனி கவனமாக செயல்பட வேண்டும். தேநீர் நல்லது. அதைச் சரியாக தயாரித்துக் குடித்தால்.

Summary

A major mistake made when preparing tea!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.