60 ல் கூட 16 மாதிரி ஜொலிக்க வைக்க உதவும் எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்! (விடியோ)

ஸ்கின் கேர் மேல ரொம்ப அக்கறை இருக்கறவங்க தயவு செஞ்சு வாரத்துல மூணு நாள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுங்க. கீரை சாப்பிட்டா இயற்கையாவே ஸ்கின் பளபளப்பா ஆயிடுமாம்
60 ல் கூட 16 மாதிரி ஜொலிக்க வைக்க உதவும் எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்! (விடியோ)

எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் சிலருக்கு சருமம் பொலிவா இல்லையேங்கற கவலை எப்பவுமே இருக்கும். காரணம் சருமத்தை சரியா பராமரிக்காததால தான். நம்மை 60 ல கூட 16 ஆக உணர வைக்கக் கூடிய அளவுக்கு அருமையான எளிமையான சருமப் பாதுகாப்பு டிப்ஸ்கள் சிலவற்றை இந்த விடியோ மூலமா இப்ப நாம தெரிஞ்சுக்கலாம்.

விடியோவில் சொல்லப்பட்டதை கட்டுரை வடிவிலும் அறிந்து கொள்ளலாம்...

பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் அவங்க ஸ்கின் பொலிவா இல்லையேங்கற வருத்தம் ரொம்ப இருக்கும். ஏன்னா, நம்ம ஸ்கின் ஒரு ஷீல்ட் மாதிரி செயல்பட்டு மொத்த உடம்பையும் தூசு, துரும்பு அண்டாம பாதுகாக்கறதால ஸ்கின் எனர்ஜெட்டிக்கா பளிச்சுன்னு இருந்தா தான் நம்மளால உற்சாகமா செயல்பட முடியும்.

அப்படிப்பட்ட ஸ்கின்னை பாதுகாப்பதற்கான எளிய டிப்ஸ் தான் இப்ப நான் சொல்லப் போறேன்.

ஸ்கின் கேரின் முதல் எதிரின்னா அது முகப்பருக்கள் தான். பருக்கள் எப்படி உண்டாகுதுன்னா? நம்ம ஸ்கின்ல இருக்கற சின்னச் சின்ன துவாரங்களில் அழுக்குகள் சேரத் தொடங்கி அது ஏற்கனவே ஸ்கின்ல இருக்கற எண்ணெய்ப்பசையோட சேரும் போது பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கு. முகப்பருக்கள் வரக்கூடாதுன்னு நினைக்கறவங்க தினமும் இரண்டு தடவை குளிக்கனும். குறைந்த பட்சம் நாலஞ்சு தடவையாவது முகத்தைக் குளிர்ந்த தண்ணீர்ல கழுவனும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தா முகப்பருக்களைத் தடுக்கலாம்.

ஸ்கின் எப்பவுமே ஃப்ரிஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி ஃப்ரெஸ்ஸா இருக்கனும்னா நிறைய தண்ணீ குடிங்க. ஒருநாளைக்கு அட்லீஸ்ட் 3 லிட்டர் தண்ணீராவது குடிச்சா தான் ஸ்கின்ல இருக்கற நச்சுப்பொருட்கள் நீங்கி நாள் முழுக்க ஸ்கின் பொலிவா இருக்கும்.

ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளிப்பழங்களை தினமும் ஒருமுறையாவது சாப்பிடுங்க. அப்படியே சாப்பிட்டாலும் சரி இல்லை ஜூஸா குடிச்சாலும் சரி. எப்படி எடுத்துக்கிட்டாலும் அது ஸ்கின்னுக்கு நல்லது தான்.

வெஜிடபிள்ஸ்ல கேரட், பீட்ரூட், சுரைக்காய், முட்டைக்கோஸ், நூல்கோல், முள்ளங்கி, டர்னிப், சவ்சவ் காய்களை எல்லாம் வாரம் தவறாம சாப்பாட்டுல சேர்த்துடுங்க. அதெல்லாம் ஃபைபர் ரிச் ஃபுட். ஸ்கின் கேருக்கு ரொம்ப ரொம்ப நல்லது.


அலர்ஜியால ஸ்கின்ல சிலருக்கு சின்ன சின்ன கொப்புளங்கள் வரும். அந்தக் கொப்புளங்களைத் தடுக்கனும்னா வேப்பிலைக் கொழுந்தை அரைச்சு கொப்புளங்கள் மேல தடவலாம். வந்த சுவடே இல்லாம கொப்புளங்கள் மறைஞ்சுடும்.

எப்பவுமே நாம சாப்பிடற சாப்பாடு எல்லாச் சத்துக்களும் நிறைந்த பேலன்ஸ்டு டயட்டா இருந்தா அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லது/

ஸ்கின் கேர் மேல ரொம்ப அக்கறை இருக்கறவங்க தயவு செஞ்சு வாரத்துல மூணு நாள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுங்க. கீரை சாப்பிட்டா இயற்கையாவே ஸ்கின் பளபளப்பா ஆயிடுமாம்.

தினமும் தூங்கப் போறதுக்கு முன்னால சுத்தமான ஆலிவ் ஆயில் வச்சு முகம், கை, கால்கள்னு மிருதுவா மசாஜ் பண்ணிக்கிட்டு படுத்து தூங்குங்க. காலையில வழக்கமா நீங்க யூஸ் பண்ற மைல்ட் சோப் வச்சு முகம் கழுவித் துடைச்சா போதும் முகம் சூப்பர் சாஃப்டா ஆயிடறதோட மாசு மரு இல்லாம பளிச்சுன்னும் இருக்கும்.

வினிகர் ஒரு பங்கு, தண்ணீர் ஒரு பங்கு சேர்த்து உடம்புல தேய்ச்சுக் குளிச்சா ஸ்கின்னுக்குப் பாதிப்பை ஏற்படுத்தற நச்சுக்கிருமிகளைத் தூர விரட்டலாம்.

தினமும் தூங்கறதுக்கு முன்னால  ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் சாப்பிட்டுப் படுங்க. அது ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லதாம்.

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான டிப்ஸ் ஒன்னு இருக்கு. அது என்னன்னா? நம்ம ஸ்கின் இயற்கையாவே ரொம்ப சாஃப்டானதுங்கறதால கூடுமான வரை  கெமிக்கல்ஸ் கலந்த ஸ்கின் கேர் & அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தறதைத் தவிர்த்துட்டு நேச்சுரல் ஸ்கின் கேர் பொருட்களான பயத்தமாவு, கடலை மாவு, பீர்க்கை ஸ்கிரப்பர், கற்றாழை ஜெல், பழங்களில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதெல்லாம் ஸ்கின்னுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்க ரெகுலரா ஃபாலோ பண்ணாலே போதும். உங்க ஸ்கின் 60 ல கூட 16 மாதிரி பளிச்சின்னு மினுங்கும்.

ஓகே வியூவர்ஸ்... அப்புறம் இந்த விடியோ பிடிச்சிருந்தா தினமணி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீங்க.

அப்போ தான் இது மாதிரியான சுவாரஸ்யமான விடியோக்களை உங்களால தொடர்ந்து பார்க்க முடியும்.

நன்றி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com