இந்தியப் பெண்கள் காலம், காலமாக இந்த 6 வகையான முக அமைப்புகளுடன் தான் இருந்து வருகிறார்கள். இந்த அறுவகை முகத்திற்கும், முகத்திலுள்ள மோவாய், நாசி, உதடுகள், கன்னங்கள், கன்ன எலும்புகள், முன் நெற்றி, முன் நெற்றியில் விழும் கூந்தல் அமைப்பு என சர்வமும் கவனித்தறியப் பட்டு அந்தந்த முகங்களுக்குத் தக்கவாறு ஐப்ரோ த்ரெட்டிங் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல காலமாக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ப, அந்தந்த முகத்துக்குத் தோதான ஐப்ரோ த்ரெட்டிங் முறையைக் கண்டறிந்து அதைப் பின்பற்றிப் பார்த்தீர்களானால் அது உங்களுக்கே புரியும்.