வீட்டில் உள்ள பொருள்களை வைத்தும் மேக்-அப்பை நீக்கலாம்!
By | Published On : 05th January 2022 01:08 PM | Last Updated : 05th January 2022 01:48 PM | அ+அ அ- |

மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களினால் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் கவனத்துடன் கையாள வேண்டும்.
சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள மேக்-அப் போடுவது எந்த அளவுக்கு முக்கியமோ வேலை முடிந்தவுடன் அதனை முறையாக நீக்குவதும் அவசியம்.
மேக்-அப்பை நீக்குவதற்காக செயற்கையாக பல்வேறு கிரீம்கள் இருக்கின்றன. அதில் இயற்கையான பொருள்களைக் கொண்ட க்ரீம்களை பயன்படுத்தலாம். ஒருவேளை மேக்-அப் ரிமூவர் இல்லையென்றாலோ தீர்ந்துவிட்டாலோ வீட்டில் உள்ள பொருள்களை வைத்தும் மேக்-அப்பை நீக்கலாம்.
முதலில் முகத்தை பேஷ்-வாஷ் கொண்டு நன்றாகக் கழுவி விட வேண்டும். சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்கவும். வேண்டுமெனில் இருமுறை கூட கழுவலாம்.
அதன்பின்னர், 2 டீஸ்பூன் குறைந்த கொழுப்புள்ள தயிர், 2 டீஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாகக் கலக்கவும். இப்போது இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவவும். 10 நிமிடங்களுக்கு பின்னர் அந்த கலவையை வைத்து ஒருமுறை முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதுமாக மசாஜ் செய்துவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதன்பின்னர் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தடலாம். இது முகத்திற்கு குளிர்ச்சியைத் தரும் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
சருமப் பராமரிப்பில் ஓட்ஸ்-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஓட்ஸ் கொண்டு அவ்வப்போது ஸ்க்ரப் செய்யலாம். ஓட்ஸ் துகள்கள் தோலில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சரும செல்களை புத்துணர்வு அடையச் செய்கிறது.
இதையும் படிக்க | டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா?