கரண்டி ஆம்லெட்!

தோசைக் கல்லில் முட்டையை உடைத்து ஊற்றினால் அது ஆம்லெட். அதே பணியாரக் கல்லில் முட்டைகளை உடைத்து ஊற்றி முழுக்கரண்டி எண்ணெயில் பொன்னிற உருண்டையாக பந்து போல பொரித்து எடுத்தால் அது கரண்டி ஆம்லெட்.
கரண்டி ஆம்லெட்!

தோசைக் கல்லில் முட்டையை உடைத்து ஊற்றினால் அது ஆம்லெட். அதே பணியாரக் கல்லில் முட்டைகளை உடைத்து ஊற்றி முழுக்கரண்டி எண்ணெயில் பொன்னிற உருண்டையாக பந்து போல பொரித்து எடுத்தால் அது கரண்டி ஆம்லெட்.

தேவையான பொருட்கள்:

முட்டை: 3
உப்பு: தேவையான அளவு
மிளகுத் தூள்: தேவையான அளவு
சின்ன வெங்காயம்: 8 பொடியாக அறிந்தது
வெங்காயத்தாள்: பொடியாக நறுக்கியது
எண்ணெய்: தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டைகளை உடைத்து ஒரு கப்பில் ஊற்றவும். அதனுடன் மிளகுத் தூள், பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், உப்பு, வெங்காயத்தாள் எல்லாம் சேர்த்து எக் பிளண்டரால் நன்கு அடித்துக் கலக்கவும். பின்னர் பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி சூடாக்கவும். கல் சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கப்பில் எடுத்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை குழிக் கரண்டியில் அள்ளி சிறிது சிறிதாக பணியாரக் கல்லில் இட்லி வார்ப்பது போல மெதுவாக சூடான எண்ணெயின் மீது வார்க்கவும். முட்டை முழுதும் வெந்து போகும் முன் அதன் பந்து வடிவம் கெடாமல் மேலே இன்னும் கொஞ்சம் மாவை வார்த்து அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டுத் திருப்பி விடவும். இப்போது பணியாரக் கல்லில் வார்த்த முட்டை அழகான பந்து போல தோற்றமளிக்கும். பந்து போன்ற முட்டை பொன்னிறமானதும் எடுத்து அழகாகத் தட்டுகளில் அடுக்கி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டிஷ் இது.

Image courtsy: www.7umsuvai.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com