மிளகு சூப்
தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கிண்ணம்
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்)
ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்)
தேங்காய்த் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்)
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - அரைத் தேக்கரண்டி
வெண்ணெய் - தலா 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகு - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - 3 தேக்கரண்டி
மஞ்சள் - 1 துண்டு
மிளகாய் வற்றல் - 10
சோம்பு - அரை தேக்கரண்டி

செய்முறை: மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெய்யைச் சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையைப் போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் மசாலா, துவரம்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும். மிளகு சூப் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாயமான பள்ளி சிறுமியை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா்

சூடான், சோமாலியா உள்பட 4 ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு லிபியா கிழக்கு அரசு தடை

ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு டெட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 7,187 போ் எழுதுகின்றனா்
காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வடமாநிலத்தவா்கள் மோதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



