தேவையான பொருட்கள்:
- வீட்டுத் தோட்டத்தில் விளைந்த நன்கு முற்றிய தேங்காய்: 3
- அகலமான பாத்திரம் - ஒன்று
- தேங்காய் உடைத்து சில்லுகள் எடுக்க கத்தி: 1
- வடிகட்ட வெள்ளைக் கதர்த்துணி- அரை மீட்டர்
செய்முறை:
நன்கு முற்றிய தேங்காய்களை நார் உறித்து எடுத்துக் கொண்டு. தேங்காயின் கண் உள்ள இடத்தில் கத்தியால் பதமாகக் கீறி அதன் வழியே தேங்காயில் இருக்கும் அமிர்தம் போன்ற நீரை வடிகட்டில் ஒரு பாத்திரத்தில் அருந்துவதற்காக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த நீரை திருமணமாகாத இளம்பெண்கள் தவிர ஏனையோர் தாராளமாக அருந்தலாம் என்கிறார்கள் வயதில் மூத்தவர்கள். அதற்கு ஏதாவது காரணமிருக்கலாம், அதைப் பற்றித் தனியாக அலசி ஆராய்வோம். இப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க வேண்டுமில்லையா?

தேங்காயில் உள்ள நீரை வடிகட்டிய பின் அதை உடைத்து சில்லுகளாக எடுத்து வைத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளில் சிறிது, சிறிதாக நீர் விட்டு நன்கு நைஸாக அரைத்து தேங்காய்ப் பாலை ஒரு வெள்ளைத்துணியால் வடிகட்டி எடுக்க வேண்டும். வெள்ளைத்துணியால் நன்கு அழுத்திப் பிழிந்தெடுத்த பின் ஓரிரவு முழுதும் அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் பாத்திரத்தின் மேற்புறத்தில் நமக்கு எண்ணெய் காய்ச்சத் தேவையான தெளிவு படிந்திருக்கும்.

அதை ஒரு கரண்டியின் உதவியால் மெதுவாக வழித்து வேறொரு ஜாடியில் சேகரிக்க வேண்டும். இந்த ஜாடியை மைக்ரோ வேவ் ஓவனிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்துக் காய்ச்சினால் நமக்குத் தேவையான சுத்தமான சுகாதார முறையில் தயாரிக்கப் பட்ட தேங்காய் எண்ணெய் கிடைத்து விடும்.

இந்த தேங்காயெண்ணெயின் சிறப்பே அது வீட்டுத்தோட்டத்தில் விளைந்து நன்கு முற்றிய ஆர்கானிக் தேங்காய் என்பது தான். எனவே வீட்டில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆசை இருப்பவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்னை இருந்தால் மட்டுமே முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் மரச்செக்கு வைத்து எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் இடங்களுக்கே நேரில் சென்று உங்கள் கண்ணெதிரே தேங்காய்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அரைத்துத் தரச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.
இப்படி வீட்டில் தயாரிக்கையில் அதன் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த எண்ணெயையும் நாம் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
Related Article
துறு துறு சுட்டிக் குழந்தைகளுக்கு சத்துமிக்க ஆர்கானிக் கீரை சாதம்!
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி!
மீன் சாப்பிடத் தெரிஞ்சா போதுமா? பார்த்துப் பார்த்து வாங்கவும் தெரியனுமே!
எடை குறைப்பில், ஆரோக்கியத்தில் ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா?!
சம்மருக்கு ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் ‘வெர்ஜின் மொஜிட்டோ’ வை வீட்டிலும் செய்து அருந்தலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


