/
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 2 கப்
- கடலை மாவு – 1 கப்
- மிளகாய் தூள் (காரப் பொடி) -3 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
- எள் – ½ தேக்கரண்டி
- உருக்கிய வெண்ணெய் – 3 தேக்கரண்டி
- சூடான எண்ணேய் – 2 தேக்கரண்டி
- கடலை எண்ணெய் (அ) ரிஃபைண்ட் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- முறுக்கு அச்சு
செய்முறை:
- வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயப் பொடி அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
- பின் உருக்கிய வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெயை பரவலாக விட்டு பிசிறவும்.
- தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். நீரை மொத்தமாக விடாமல் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சிறிது சிறிதாக சேர்த்து மாவை பிசையவும்.
- மிருதுவான பதத்தில் மாவை பிசைந்து வைக்கவும்.
- மாவை சிறு நீள் வட்ட உருண்டைகளாக செய்து முறுக்கு அச்சில் நிரப்பவும்.
- எண்ணெயை கடாயில் நன்கு சுடும் வரை காய வைக்கவும்.
- எண்ணெய் நன்றாக சுட்டதும் மாவில் இருந்து சிறு அளவைக் கிள்ளி எடுத்து போட்டுப் பார்க்கவும். மாவு சட்டென்று மேலே வந்து வேக ஆரம்பித்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பின் அச்சிலிருக்கும் மாவை எண்ணெயில் வட்ட வடிவில் பிழியவும்.
- சத்தம் அடங்கியதும் அடுத்த பக்கம் திருப்பிப் போடவும். மிகவும் சிவக்காமல் பக்குவம் பார்த்து முறுக்கை பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
- கடலை மாவும் அரிசி மாவும் தரமானதாக இருத்தல் அவசியம்.
- தரமற்ற மாவினால் செய்யபடும் முறுக்கு உடைந்தும், சிவந்தும் ருசியில் குறைந்தும் இருக்கும்.
- வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெய் கலப்பது, முறுக்கை மிருந்துவாகவும் கரகரப்பாகவும் வாயில் போட்டவுடன் கரையும் ருசியுடன் இருக்க உதவும்.
- எண்ணெயை நல்ல சூடான நிலையிலேயே வைத்திருந்து பக்கோடாக்களை பிழியவும். மிக மிதமான சூட்டிலோ அ மிதமான சூட்டிலோ அடுப்பை வைத்திருந்தால் முறுக்கு அதிக எண்ணெயை இழுத்துக் கொள்ளும்.
- அதிக அளவு செய்வதாய் இருந்தால், மொத்த மாவையும் ஒரேடியாக பிசைந்து வைக்காமல், பகுதிகளாக பிரித்துக் கொண்டு செய்யவும். பிசைந்த மாவை அதிக நேரம் வைத்திருந்தால் முறுக்குகள் சிவந்தும் சுவை குறைவாகவும் மாறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

41 ராணிப்பேட்டை

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


