வரகரிசி அடை
தேவையான பொருட்கள்:
வரகு - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம் பருப்பு 1/4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பாசிப் பருப்பு - 2 தேக்கரண்டி
அவல் - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்துமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய இஞ்சி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
- முதலில் வரகு, பருப்புக்கள் மற்றும் அவலை நீரில் தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத் தூளைப் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர், ஊற வைத்துள்ள வரகில் உள்ள நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து, வரகுடன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2 மணிநேரம் ஆன பின்னர், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி காய்ந்ததும், அடை மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வரகு அரிசி பருப்பு அடை ரெடி.
- இதனை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அவியலுடனும் சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



