வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்! ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

முதல்முறையாக ஹாங்காங் சிக்ஸஸ் கோப்பை வென்ற ஆப்கானிஸ்தான்!

ஹாங்காங் சிக்ஸஸ் கோப்பை வென்ற ஆப்கானிஸ்தான் அணி குறித்து...

The Afghanistan team in the joy of victory

வெற்றிக் களிப்பில் ஆப்கானிஸ்தான் அணியினர் - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஹாங்காங், சீனா

Updated On :

ஹாங்காங் சிக்ஸஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஹாங்காங் 6 வீரர்களைக் கொண்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இதில் இந்தாண்டு மோங் கோக் மிஷன் ரோடு திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணி 56 ஓவர்களில் 115/4 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ் பிரையன்ட் 14 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். நிக் ஹோப்சன் 8 பந்துகளில் 23, அலெக்ஸ் ரோஸ் 10 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக இம்ரான் மிர் 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஃபர்மானுல்லா சஃபி 7 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய பேட்ரிக் டூலே 1 விக்கெட்டு எடுத்து 2 ஓவர்களுக்கு 35 ரன்கள் கொடுத்தார்.

ஆஸி. கேப்டன் கிறிஸ் கிரீன் ஒரே ஓவரில் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது முதல் ஹாங்காங் சிக்ஸஸ் சாம்பியன்ஷிப் கொப்பையை வென்றுள்ளது.

Summary

Afghanistan wins the Hong Kong Sixes championship for the first time!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.