நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கணக்கில் வராத பண விவகாரங்கள் அனைத்தும் தோண்டப்படும்! ஜப்பானில் மோடி உரை!

நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கணக்கில் வராத பண விவகாரங்கள் அனைத்தும் தோண்டப்படும்! ஜப்பானில் மோடி உரை!

கருப்புப் பணம் வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் எத்தகைய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அரசிடமிருந்து தப்ப முடியாது.”
Published on

“கணக்கில் வராத கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர்கள் எவராயினும் தண்டிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் அவர்களது கணக்கு வழக்குகள் பற்றிய வரலாறு 'நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி' ஆதாரங்களுடன் தோண்டி எடுக்கப்படும். கருப்புப் பணம் வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் எத்தகைய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அரசிடமிருந்து தப்ப முடியாது.” இது ஜப்பானில் வாழும் புலம் பெயர் இந்தியர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் எச்சரிக்கை உரை.
 
வங்கி விதிகளுக்குட்பட்டு வரவு, செலவு கணக்கில் முரண்பாடுகள் இருந்து மிகுதியான பணத்துக்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லையெனில் அப்போது அந்தப் பணம் கருப்புப் பணம் என்றே குறிப்பிடப்படும். இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்க அரசு போதுமான நபர்களை நிர்மாணிக்கும். என்றும் மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com