/

காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில்,

News image
Updated On :4 அக்டோபர் 2018, 1:24 pm IST

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

Story image

முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில் சுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை நீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும்.

Story image

வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய் போன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு பின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம். 

Story image

காலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர் மீண்டும் கழுவி பயன்படுத்தவேண்டும்.

Story image

மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

Story image

கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
- என். சண்முகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.