இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? ரொம்ப ஈஸி இதை ட்ரை பண்ணுங்க!

கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? ரொம்ப ஈஸி இதை ட்ரை பண்ணுங்க!
Published on
Updated on
1 min read
  • வேப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர பித்தப்பை நோய் குணமாகும்.
  • காலையிலும், இரவிலும் காய்ச்சியப் பசும்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.
  • கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  • மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி, எலும்பு  உறுதி, பற்கள் கெட்டிப்படும்.
  • அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் மறையும்.
  • மாதவிடாய் காலங்களில் கோதுமை கஞ்சி சாப்பிட்டு வர உடற் சோர்வு நீங்கி பலம் பெறும்.
  • பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக் கொடுக்க ரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட  உறுதியாகும்.
  • வில்வ இலையின் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்க கண் வலி, கண் சிவப்பு, அரிப்பு நீங்கும்.
  • சப்போட்டா பழத்தை தினம் பகல் பொழுதில் சாப்பிட்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.
  • மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.
  • வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடு நீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும்.
  • கடற் சங்கை பசும்பால் விட்டு இழைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
  • துளசி இலையை கசக்கி அதன்சாற்றை முகத்தில் தடவி காய விட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.
  • நன்னாரி வேர் ஐந்து கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு, நீர் சுருக்கு குணமாகும்.
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கை காயவைத்து இடித்து தூளாக்கி பசும் பாலுடன் சாப்பிட்டு வர உடல் உருக்கி நோய் குணமாகும்.
  • கோவை இலை சாறு நல்லெண்ணெய்யில் காய்ச்சி தலை மூழ்கி வர சொறி, சிரங்கு, படை நீங்கும்.
  • கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால் வீக்கம் வராது.
  • வெள்ளைப் பூண்டு அரைத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.
  • கொத்துமல்லி சாறெடுத்து முன் நெற்றியில் பற்றுப் போட்டால் தலை பாரமாக இருத்தல் விலகும்.
  • செம்பருத்திப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.

('எளிய பாட்டி வைத்தியம்' -என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com