சமீபத்திய ஆய்வொன்றில் சென்னையின் மூன்று குடியிருப்புப் பகுதிகள், இந்தியாவின் மிக விலையுயர்ந்த பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இதன்மூலமாக இந்தியாவின் ஹைடெக் நகரங்களின் பட்டியலில் சென்னை அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், எக்மோர், அண்ணாநகர் உள்ளிட்ட மூன்று பிரதான குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்தியாவின் சொத்துச் சந்தையில் டாப் டென் லிஸ்டில் முறையே 4, 5, 7 ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதென்பது அப்பகுதியில் உள்ள நிலத்தின் ஒரு சதுர அடிக்கான பண மதிப்பைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.
அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு சதுர அடி மனையின் தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது 18,000 ரூபாயாக உள்ளது.
எக்மோரில் ஒரு சதுர அடி மனையின் விலை ரூ.15,100, அண்ணாநகரில் 13,000 ரூபாயாகவும், கீழ்பாக்கத்தில் 10,600 ரூபாயாகவும், சென்னை, கோட்டூர்புரத்தில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 9,600 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சராசரியாக ஒரு ஆடம்பர அபார்ட்மெண்ட் என்பது 2,190 சதுர அடி முதல் 2,890 சதுர அடிக்குள் அடங்கும்.
டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தவிர சென்னையின் அனைத்துப் பகுதிகளிலுமே தற்போது சதுர அடி மனையின் விலையில் குறையேதும் இல்லை. பொருளாதாரச் சுணக்கம் நீடிக்கும் இந்த நேரத்தில் கூட மனை விலையில் அதிரடி மாற்றங்களேதும் நிகழ்ந்துவிடவில்லை.
சென்னை ஆழ்வார் திருநகரில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 6,758 முதல் - 7,565 ஆக நீடிக்கிறது.
மாங்காடு - 3,485 முதல் 4,080 ரூபாய் வரை...









