பாம்பைக் கடித்து துண்டு துண்டாக்கிக் கொன்ற உத்தரப்பிரதேச இளைஞன்!

ராஜ்குமார் அப்படி என்ன செய்தார்? தன்னைக் கடித்த பாம்பை ஆத்திரம் தீருமட்டும் தானும் திரும்பக் கடித்து விட்டார். சும்மா இல்லை... துண்டு துண்டாக கத்தியால் நறுக்கியது போல மூன்று துண்டங்களாகக் கடித்துத் து
பாம்பைக் கடித்து துண்டு துண்டாக்கிக் கொன்ற உத்தரப்பிரதேச இளைஞன்!

உத்தரப் பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிறு அன்று ஒரு வினோதமான காரியம் நிகழ்ந்திருக்கிறது.

சிலருக்கு குடிபோதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது என்பார்கள்... நான் இப்போது சொல்லப் போகும் உ ப் சம்பவமும் கூட அத்தகையதில் ஒன்றே!

அங்கு ராஜ்குமார் எனும் இளைஞர் காயிறு இரவு தன் வீட்டில் குடிபோதையில் படுத்திருக்கையில் திடீரென அவரைப் பாம்பு கடித்திருக்கிறது. பாம்பு கடித்தால் அல்ல, பாம்பைக் கண்ணில் பார்த்தாலே போதும் பலருக்கு ஜன்னி கண்டு விடும். ஆனால் ராஜ்குமாருக்கு அப்படி ஏதும் ஆகாமல் தன்னைக் கடித்த பாம்பின் மீது கோபம் தலைக்கேறியிருக்கிறது. அந்த கோபத்தை தீர்த்துக் கொள்ள அவர் செய்த வினோதமான காரியம் தான் இன்று அவரை உலகச் செய்திகளில் இடம்பெற வைத்திருக்கிறது.

ராஜ்குமார் அப்படி என்ன செய்தார்? தன்னைக் கடித்த பாம்பை ஆத்திரம் தீருமட்டும் தானும் திரும்பக் கடித்து விட்டார். சும்மா இல்லை... துண்டு துண்டாக கத்தியால் நறுக்கியது போல மூன்று துண்டங்களாகக் கடித்துத் துப்பி விட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன ராஜ்குமாரின் தந்தை அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த மருத்துவர்களிடம் ராஜ்குமாரின் தந்தை, என் மகன் பாம்பு கடித்து சீரியஸான நிலையில் இருக்கிறான், அவனுக்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணவசதி இல்லை என்பதால் இங்கு அழைத்து வந்தேன், நீங்கள் தான் எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியபோது முதலில் மருத்துவர்கள், நோயாளியை பாம்பு கடித்து விட்டது போலும் என்று நினைத்து விட்டார்கள். அப்புறம் தான் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது, நோயாளியை பாம்பு கடித்தது மட்டுமே இங்கு பிரச்னை இல்லை, பதிலுக்கு நோயாளியும் பாம்பைக் கடித்ததில் விஷம் முற்றிய நிலையில் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று.

இப்படி ஒரு வினோதமான கேஸை அவர்கள் இதுநாள் வரை கண்டதில்லை என்பதால் அவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் தற்போது ராஜ்குமார் சீரியஸான நிலையில் வேறொரு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த வினோத சம்பவத்தின் பின் ராஜ்குமாரால் கடித்துக் கொல்லப்பட்ட பாம்பை அவரது குடும்பத்தார் எரியூட்டினார்கள்.

இது செய்தி... செய்தியின் கீழ் வாசகர்கள் சிலர் அளித்திருக்கும் கமெண்டுகள் நகைப்பூட்டுவனவாக இருந்தன.

1. இது நிஜமாகவே காட்டுத்தனமான செயல், இதை அந்தப் பாம்பு கற்பனை கூட செய்திருக்காது!

2. இம்மாதிரியான சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தான் நடக்க முடியும். அங்கே தான் மனிதர்களைப் பாம்பு கடித்தால் பதிலுக்கு மனிதர்கள் பாம்பைக் கடிப்பார்கள்.

3. பாம்பைக் கடித்தவனைப் பிடித்து பத்திரப்படுத்துங்கள். அவனைப் போன்றவர்கள் அரிதானவர்கள், பாட்டிலில் அடைத்து பூமிக்கடியில் புதைத்து வைத்து பாதுகாக்க வேண்டும்.

4. இது தான் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதா?!

5. இருவரில் யார் அறிவாளி என்று நான் அதிசயித்துப் போய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

6. உபி யில் பாம்புகள் மனிதர்களைக் கடிப்பதில்லை, மனிதர்கள் தான் பாம்பைக் கடிப்பார்கள்!

என்றெல்லாம் வாசகர்கள் கமெண்ட் அளித்திருப்பது நகைக்கும்படியாயிருந்தது.

நகைத்தாலும் கடைசியில் யோசனை வந்து நிலைகொள்வது மனிதர்களின் குடிபோதையில் தான்.

குடித்து விட்டால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே குடிகாரர்கள் மறந்து போவார்கள் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணம்!

இத்தனைக்கும் உபியில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் நேரத்தில் இப்படியான சம்பவங்கள் நிகழ்வது விரும்பத்தக்கதல்ல. மொடாக்குடியர்களை திருத்த அரசு மதுவுக்கு எதிரான நிபந்தனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டுமோ?!

இந்த உ பி விவகாரத்தில் நாயை அல்ல, கடித்த பாம்பை திரும்பக் கடித்திருக்கிறார் குடிபோதை இளைஞர் ஒருவர்.

இம்மாதிரியான வினோத சம்பவங்கள் நிகழ்வதெல்லாம் வடமாநிலங்களில் மட்டுமாக இருப்பது இவ்விஷயத்தில் நகைமுரண்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com