உடல் ஆரோக்கியத்துக்கும், சருமப் பராமரிப்புக்கும் 'ஆயில் புல்லிங்'

நல்லெண்ணையை பயன்படுத்தி 'ஆயில் புல்லிங்' செய்து வந்தால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நவீன யுகத்தில் இன்று நாம் பலரும் உடலியல் பிரச்னைகள் பலவற்றுக்கு இயற்கை முறையை நாடாமல், செயற்கையை நம்பி வாழ்ந்து வருகிறோம். ஆனால், ரசாயனம் நிறைந்த பொருள்களைப்  பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அந்த வகையில், நல்லெண்ணையை பயன்படுத்தி 'ஆயில் புல்லிங்' செய்து வந்தால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. 

வாரத்திற்கு ஒருமுறையாவது தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி, நகரமயமாக்கல், வேலைப்பளுவினால் மக்கள் பெரும்பாலும் இந்த நடைமுறையை கடைபிடிப்பதில்லை. எனினும், சில நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 

► சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். பற்களின் இடையில் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை செய்யலாம். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். 

► பல் தேய்த்த பின்னர், உணவு உண்பதற்கு முன்பாக இதனைச் செய்தால் சில மாதங்களில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியத்திலும், சரும பராமரிப்பிலும் ஆயில் புல்லிங் முக்கிய பங்கு வகிக்கிறது. 

► ஆயில் புல்லிங் செய்வதால் பொதுவாக உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். 

► நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் சரியாகும். அமைதியான நீண்ட உறக்கம் கிடைக்கும். நல்ல மனநிலை உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

► வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறுவதால் வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் குளிர்ச்சியாக இருப்பதால் சூடு தணியும். 

► ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், தூக்கமின்மைக்கும் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.  

► தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வருவதால் பார்வைக் கோளாறுகள் நீங்கும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே, உடலியல் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் இருப்பதை உணர முடியும்.  

► இவை அனைத்திற்கும் மேலாக சருமம் பொலிவுடன் காணப்படும். 

எனவே, அக மற்றும் முக அழகிற்கு ஆயில் புல்லிங் செய்யுங்கள்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com