எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!

திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும்  ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2020, 11:12 am

DIN

ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும்  ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

திராட்சை பழத்தை தினமும் உட்கொள்வதால் உடல் கொழுப்பு குறையும், மேலும் கருப்பு திராட்சை விதையானது புற்றுநோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது. குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயைத் தடுக்க கருப்பு திராட்சை உண்ண வேண்டியது அவசியம். 

சிறுநீரகப் பிரச்னை, கண் புரை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கருப்பு திராட்சைக்கு உண்டு. திராட்சை அல்லது திராட்சை பழச்சாறு அருந்துவதால் சருமப் பிரச்னைகள் தீரும். உடல் வறட்சி நீங்கும். கோடை காலத்தில் தினமும் திராட்சை சாறு அருந்துவது நல்லது. மேலும், திராட்சைப் பழச்சாறு ரத்த ஓட்டத்தை சீராக்கும். 

அதேபோன்று கருப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பொலிவு பெறும். 

கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் திராட்சை சாறை தடவி வர விரைவில் கருவளையம் மறைந்து விடும். 

இதற்கெல்லாம் மேலாக திராட்சையில் உள்ள மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் எனும் இரு அமிலங்கள் மனச் சோர்வை/ மன அழுத்தத்தை குறைக்கும் என அமெரிக்க ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.