மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்களா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை மன அழுத்தம். அதிலும் கரோனா தொற்றினால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் பலரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். 
மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்களா?
Updated on
1 min read

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை மன அழுத்தம். அதிலும் கரோனா தொற்றினால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் பலரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். 

கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ஈ.சி.யு) ஆராய்ச்சியாளர்கள்.

பழம் மற்றும் காய்கறிகளைக் கொண்ட உணவை உட்கொள்பவர்கள் குறைந்த மன அழுத்தத்தையே கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வு கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தது 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 230 கிராமுக்கு குறைவாக காய்கறி, பழங்களை உட்கொண்டவர்களைவிட 470 கிராம் காய்கறி, பழங்கள் சாப்பிட்டவர்களுக்கு மன அழுத்தம் 10 சதவீதம் குறைவாக இருந்தது. 

எனவே, மன அழுத்தம் எதிர்பார்க்கும் அளவுக்கு குறைய வேண்டுமெனில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

இதைத் தாண்டி உடற்பயிற்சி, யோகா, குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மனம்விட்டு பேசுதல், பிடித்த வேலைகளைச் செய்தல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றினால் மன அழுத்தம் காணாமல் போய்விடும்.

மன அழுத்தம் அனைவருக்கும் வரக்கூடியதுதான். அதனை மனதிடத்துடன் எதிர்கொண்டால் எந்தவொரு மன அழுத்தத்தில் இருந்தும் விரைவில் மீண்டுவிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com