அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால்தான் இன்று உடல்நலப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்நிலையில் உணவு முறைகளுக்கும் மனிதனின் ஞாபகசக்திக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஜப்பான் ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் டிமென்ஷியா எனும் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: டிமென்ஷியா எனும் மறதி நோய்
'சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு உணவியல் நிபுணரும் பரிந்துரைக்கும் ஒன்று நார்ச்சத்து. ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு இது மிகவும் முக்கியமானது. கொழுப்பு குறைவாக இருப்பதால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும். உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.
இத்துடன் மூளையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் நார்ச்சத்து உதவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்கள் அதிகம் சாப்பிடும் ஒருவருக்கு டிமென்ஷியா எனும் ஞாபகமறதி ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக நார்ச்சத்து கொண்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், டிமென்ஷியா ஏற்படுவதைக் குறைக்க முடியும்' என்று முதன்மை ஆய்வாளர் கசுமாசா யமகிஷி கூறினார்.
இந்த ஆய்வின் முடிவுகள் 'நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | 'டயட்'டில் இருப்பவரா நீங்கள்? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!

உளவாளியாக நடிக்கும் தனுஷ்?

புதிய புரட்சி! விஜய்க்கு வாழ்த்துக்கள்! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


