அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

கண்களுக்கு மேக் அப் செய்வதுபோல புருவங்களும் நேர்த்தியாக சரியான அளவுடன் மிதமான அடர்த்தியுடன் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பும்.
அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

கண்ணனுக்கு மை அழகு என்பது போல, கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கே அழகு சேர்ப்பது புருவங்கள். 

கண்களுக்கு மேக் அப் செய்வதுபோல புருவங்களும் நேர்த்தியாக சரியான அளவுடன் மிதமான அடர்த்தியுடன் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பும். ஏன், புருவங்களில் ஆண்கள் கூட இப்போதெல்லாம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். 

அந்தவகையில், பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை புருவங்கள் மெல்லியதாக இருப்பது. இதற்கு தொற்றுகள், ஊட்டச்சத்து குறைபாடு, ஹைப்போ தைராய்டிசம் என பல காரணங்கள்  கூறப்படுகின்றன.

புருவங்கள் மெலிதாக இருக்கும்போது அது கவரும் வகையில் இருக்காது என்பதால் அடர்த்தியான புருவங்களைப் பெற மெனக்கெடுகிறார்கள். 

இதற்காக, செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஜெல், பென்சில் என பல தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றை பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் சரி செய்ய வேண்டியிருக்கும். 

புருவங்கள் அடர்த்தியாக...

புருவங்கள் நிரந்தரமாக, அடர்த்தியாக வளராக சில இயற்கை வழிமுறைகளை முயற்சிக்கலாம். 

தேங்காய் எண்ணெய் 

டயட் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யில் சமைத்து உண்ணலாம் என்கின்றனர் நிபுணர்கள். அந்த அளவுக்கு உடலில் கொழுப்பை குறைப்பதில், அதாவது எடையைக் குறைப்பதில் உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அந்த வகையில், புருவங்களை அடர்த்தியாக்க மிகவும் சாதாரண பொருள் தேங்காய் எண்ணெய். இரவு தூங்கப்போகும் முன்பாக சில துளிகள் தேங்காய் எண்ணெய் எடுத்து புருவங்களுக்கு மாசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடலாம். காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும். 

விளக்கெண்ணெய் 

மிகவும் அடர்த்தியாக இருக்கும் விளக்கெண்ணெயின் பயன்பாடு தற்போது குறைந்துவிட்டதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

புருவங்களை அடர்தியாக்க தினமும் இரண்டு முறை புருவங்களில் விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது தொற்றுகளில் இருந்து புருவங்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இது புருவ முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கும். 

ஆலிவ் எண்ணெய் 

ஆலிவ் எண்ணெய் புருவங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. 

அதுபோல சருமத்திற்கும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். 

தூங்குவதற்கு முன்பு, 4-5 துளிகள் ஆலிவ் எண்ணெயை எடுத்து அத்துடன் 3 துளிகள் தேனை கலந்து புருவங்களில் மசாஜ் செய்ய வேண்டும். 

வெங்காயச் சாறு 

வெங்காயச் சாறில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள்,சல்பர் , செலினியம் ஆகியவை முடிக்கு வலுவூட்டுகிறது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை புருவத்தில் வெங்காயப் சாறை தேய்த்து வரலாம். 

டீ ட்ரீ ஆயில் 

அழகுக்காக பயன்படுத்தப்படும் பொருள்களில் மிக முக்கியமான ஒன்று டீ ட்ரீ ஆயில். கடைகளில் கிடைக்கும். தினமும் இரவு தூங்கும்முன் அப்ளை செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com