கோப்புப்படம்
கோப்புப்படம்

இதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாமா? - நம்பிக்கையும் உண்மையும்!

இதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யக்கூடாது, ஆண்களுக்கு இதய பிரச்னைகள் அதிகம் ஏற்படும், பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட ஆஞ்சியோபிளாஸ்டி பாதுகாப்பானது, இந்த கூற்றுகள் எல்லாம் சரியானதா?

இதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யக்கூடாது, ஆண்களுக்கு இதய பிரச்னைகள் அதிகம் ஏற்படும், பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட ஆஞ்சியோபிளாஸ்டி பாதுகாப்பானது, இந்த கூற்றுகள் எல்லாம் சரியானதா?

இதய நோய்கள் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி ப்ரிமஸ் பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர் டாக்டர் விகாஸ் சோப்ரா. 

ஆண்கள் மட்டுமே இதய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர், பெண்களுக்கு அரிதாகவே இதய பிரச்னைகள் ஏற்படும்.

பெண்களைவிட ஆண்களுக்கு இதய நோய்கள் முன்னதாகவே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், மாதவிடாய் நிற்கும் வரை, பெண்கள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் மூலம் ஓரளவு பாதுகாக்கப்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமான அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் இரு தரப்பினரும் சரிசமமான அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரு தரப்பினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

இதய நோயாளிகள் எந்த உடற்பயிற்சியும் செய்யக்கூடாது.

இதய நோயாளிகளுக்கு உடற்பயிற்சி அவசியம். மருத்துவர்களின் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடற்பயிற்சி செய்வதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு ஏற்படும் என்பதற்கான வாய்ப்பு குறைவு என்று ஐரோப்பிய சொசைட்டி ஆப் கார்டியாலஜி கூறுகிறது. இருப்பினும், குளிர்காலத்தில், உடற்பயிற்சி செய்யும்போது, உடல் வெப்பநிலைக்காக பொருத்தமான ஆடைகளை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். 

இதய நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் உணவில் குறைந்தபட்ச கொழுப்பு இருக்க வேண்டும். 

இதய நோயாளிகள் உணவில், நிறைவுற்ற கொழுப்புகள், பகுதியளவு ஹைட்ரஜனேற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இருப்பினும், அனைத்து கொழுப்புகளும் கேடுவிளைவிக்கக் கூடியது அல்ல. மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பான ஒமேகா-3 நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. எனவே, கொழுப்புகளை முழுமையாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக தேவையான நல்ல கொழுப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக இருந்த புகைப்பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய் அபாயத்தை குறைக்க முடியாது.

உண்மையில் புகைப்பழக்கம் இருந்தாலும் அதை நிறுத்தினால் இதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது உடல்நிலை மேம்படையத் தொடங்குகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதுடன், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

நெஞ்சு வலி, மாரடைப்பு இரண்டும் ஒரேமாதிரியானது. 

நெஞ்சு வலி, மாரடைப்பு இரண்டும் வெவ்வேறானவை. நெஞ்சு வலி என்பது இதய ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுவது. ஆனால், மாரடைப்பு என்பது இதயம் முற்றிலும் செயலிழப்பது. நெஞ்சு வலி ஏற்படும்போது சுயநினைவு இருக்கும், ஆனால் மாரடைப்பில் இருக்காது. இதற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் மாறுபடும். 

பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட ஆஞ்சியோபிளாஸ்டி பாதுகாப்பானது

ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சையின் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நோயாளிகளின் நிலையைப் பொறுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com