உடற்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா?

உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்கு எல்லாம் சென்று தினமும் மணிக்கணக்கில் கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. 

நவீனத்தின் எதிரொலியாக உடல் இயக்கம் குறைந்துள்ள இந்த நேரத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உடல் மற்றும் மனநிலையை சரியாகப் பராமரிக்க தினமும் 30 நிமிடமாவது லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். 

ஏனெனில் உடற்பயிற்சி செய்தாலும் இக்கால உணவுப்பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் பல்வேறு நோய்களை உண்டுபண்ணுகிறது. எனினும் சில நோய்கள் வராமல் தடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

உடல் பருமன் என்ற பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில் உடற்பயிற்சியின் அவசியத்தை பலரும் இன்று உணர்ந்துள்ளனர்.

ஜிம்முக்கு செல்ல வேண்டுமா? 

உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்கு எல்லாம் சென்று தினமும் மணிக்கணக்கில் கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. லேசான உடற்பயிற்சி போதுமானது. 

காலை எழுந்தவுடன் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள திறந்தவெளி, பசுமை நிறைந்த இடங்களில் நடைப்பயிற்சி செய்யலாம். அரை மணி நேரம் நடப்பதே போதுமானது. 

அதுபோல காலையில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நேரம் கிடைக்கும்போது, ஆனால் வெறும் வயிற்றில் நடக்க வேண்டும். 

நன்மைகள் என்னென்ன? 

♦ உடல் பருமன் பிரச்னைக்கு எளிதான தீர்வு உடற்பயிற்சி. ஏனெனில் உடல் பருமனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதன் எதிரொலியாக உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. 

♦ மேலும் உடற்பயிற்சி செய்வதால் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், பயம், மன அழுத்தம், சிலபுற்றுநோய்கள், முடக்குவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இருந்து காக்கிறது. 

♦ உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதாக பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. 

♦ நீண்ட ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. 

♦ உடல் உறுப்புகள் புத்துணர்வு அடைவதால் உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். 

♦ நினைவாற்றலை மேம்படுத்தும்.

♦ தசைகள், எலும்புகள்  பலப்படும். 

♦ உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அழகு என்பதைத் தாண்டி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com