தலைமுடி பராமரிப்பு: தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா?

நவீன உணவு பழக்கவழக்கங்கள், பராமரிப்பின்மை, ரசாயனம் நிறைந்த பொருள்கள் ஆகிய காரணங்களால் தலைமுடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. 
தலைமுடி பராமரிப்பு: தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா?

தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதுதான். நவீன உணவு பழக்கவழக்கங்கள், பராமரிப்பின்மை, ரசாயனம் நிறைந்த பொருள்கள் ஆகிய காரணங்களால் தலைமுடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. 

தலைமுடியைப் பராமரிப்பதில் ஒவ்வொருவருக்கும் சில கேள்விகள் இருக்கும். சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள், சிலர் வாரத்திற்கு இருமுறை.. அதுபோல எந்த மாதிரியான ஷாம்பூ பயன்படுத்த வேண்டும் என்று பல கேள்விகள் இருக்கலாம். ஆனால், இவை எல்லாம் அவரவர் தலைமுடியின் தன்மையைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள். 

தலைமுடியை முடிந்தவரை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுவே தலைமுடி பராமரிப்பில் முதல் படியாகும். 

தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா? 

சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இது தேவையா என்றால் முடியின் தன்மையைப் பொருத்தது. மெல்லியதாக முடியாக இருத்தல், அதிகமாக வியர்வை ஏற்பட்டால், பொடுகு இருந்தால், தலையில் அரிப்பு இருந்தால், வெப்பநிலை அதிகம் இருந்தால் தினமும் தலைக்குக் குளிக்கலாம். 

முடி கடினமாக இருந்தாலோ ஸ்கால்ப் வறண்டு இருந்தாலோ தினமும் குளிப்பதைத் தவிர்க்கலாம். மாறாக, சில தினங்களுக்கு ஒருமுறை குளிக்கலாம். 

சிலர் வாரத்திற்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பார்கள். இதுவும் ஆபத்துதான். 

முடிந்தவரை உங்கள் நிலைமைக்கு ஏற்றாற்போல தலைக்கு குளிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அல்லது தலைமுடி பிரச்னைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும். 

ஷாம்பூ 

எத்தனை முறை தலையை அலசினாலும் ஷாம்பூவை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தலையில் சுத்தமாக அழுக்கு இல்லை எனும் பட்சத்தில் வெறுமனே தண்ணீர் மட்டும் விட்டு அலசலாம். அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி உடையும்.

அதுபோல ஷாம்பூவை அப்படியே பயன்படுத்தாமல் சிறிது தண்ணீர் சேர்த்து பயன்படுத்த வேண்டும். பின்னர் நன்றாக தண்ணீர் ஊற்றி தலைமுடியை அலசிவிட வேண்டும். ஷாம்பூ தலைமுடியில் இருந்தால் பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். 

சிலர் எப்போதாவது மட்டுமே ஷாம்பூவை பயன்படுத்துவார்கள். அப்படியே தலைக்கு வெறும் தண்ணீர் மட்டும் விட்டு அலசுவார்கள். இதுவும் சரி கிடையாது. ஏனெனில் தலையில் அழுக்கு சேர்ந்து பல பிரச்னைகளை ஏற்படுத்தும். 

முடிந்தவரை ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com