சிக்கன் - பன்னீர் எது சிறந்தது?

பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரங்கள் உள்ளதால், முடக்கு வாதத்தைத் தடுப்பதில் பயனுள்ளதாக உள்ளது.
சிக்கன் - பன்னீர் எது சிறந்தது?
Published on
Updated on
1 min read

பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரங்கள் உள்ளதால், முடக்கு வாதத்தைத் தடுப்பதில் பயனுள்ளதாக உள்ளது. பன்னீர் ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி போன்ற நோய்களுக்கு எதிராகவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.

எதில் புரதம் அதிகம்?

அதிக புரதச்சத்து தேவை என்றால், சிக்கன் சாப்பிடலாம். அதிக புரதம் சாப்பிடுவதால் எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க முடியும். இருப்பினும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகும். 100 கிராம் கோழி இறைச்சியில் 31 கிராம் புரதம் உள்ளது. அதேபோல், 100 கிராம் பன்னீரில் 20 கிராம் புரதம் உள்ளது.

சிறந்த ஊட்டச்சத்துக்கள் எதில்?

சிக்கனில் உள்ள வைட்டமின் பி12, நியாசின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் வளமான மூலங்கள் உள்ளது. மறுபுறம், பன்னீரில் கால்சியத்தின் வளமான மூலங்கள் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

கலோரிகள் பற்றி?

குறைந்த கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்ள விரும்பினால், சிக்கன் சிறந்த தேர்வாக இருக்கும். 100 கிராம் சிக்கனில்165 கலோரிகள் உள்ளது. மறுபுறம், 100 கிராம் பன்னீரில் 265-320 கலோரிகள் உள்ளது.

எந்த வகை வாங்கலாம்?

கோழிக்கறியை தேர்வு செய்யும்போது ஆன்டிபயாடிக் இல்லாத இறைச்சியை தேர்வு செய்யவும். உடல் எடையைக் குறைக்க விரும்பினால், குறைந்த கொழுப்புள்ள பன்னீரை தேர்வு செய்ய வேண்டும்.

எது சிறந்தது?

இரண்டுமே புரதத் தேவைகளுக்கு மிகச் சிறந்தவை.  குறைவான கொழுப்புச் சத்துள்ள  உணவை சாப்பிட விரும்பினால் கோழிக்கறி ஒரு சிறந்த தேர்வு. இவை இரண்டிலும்  புரதச்சத்து உள்ளது. மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது தேர்ந்தெடுப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com