கேஸ் அடுப்பில் சமைத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுமா? - ஆய்வு சொல்வது என்ன?

கேஸ் சிலிண்டர்கள் இணைப்புள்ள அடுப்புகளில் இருந்து வெளியாகும் நச்சுத் துகள்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவுடன் தொடர்புள்ளதாக ஐரோப்பிய விஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
கேஸ் அடுப்பில் சமைத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுமா? - ஆய்வு சொல்வது என்ன?

கேஸ் சிலிண்டர்கள் இணைப்புள்ள அடுப்புகளில் இருந்து வெளியாகும் நச்சுத் துகள்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவுடன் தொடர்புள்ளதாக ஐரோப்பிய விஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களாலும் பாதிப்பு இருக்கிறது என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

டச்சு விஞ்ஞானிகள் 247 வீடுகளில் உள்ள காற்றின் தரத்தை ஆய்வு செய்து அதில் நைட்ரஜன்-டை-ஆக்சைடு (NO2) சராசரியாக எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். அப்போது கேஸ் சிலிண்டர்கள் கொண்டு சமைப்பவர்களின் வீடுகளில் நைட்ரஜன்-டை-ஆக்சைடு இரண்டு மடங்கு இருப்பது தெரிய வந்தது. 

மேலும், கேஸ் சிலிண்டர்களைக் கொண்ட 4 வீடுகளில் ஒரு வீடு, நிர்ணயிக்கப்பட்ட மாசு அளவை மீறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் மின்சார குக்கர்களைப் பயன்படுத்தும்போது காற்று மாசு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

உணவுகளை சமைக்க, சமையல் எரிவாயு எரிக்கப்படுவதால் வெளியாகும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு போன்ற துகள்கள் நுரையீரலை சேதப்படுத்துவதாகவும் காற்றுப் பாதைகளை வீக்கப்படுத்துவதாகவும் இது குறிப்பாக குழந்தைகளிடையே ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் கூறுகிறது. 

சமைக்கும் நேரத்தில் சமையலறை மற்றும் வீட்டின் மற்ற அறைகளில் நச்சுத் துகள்கள் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. 

குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமையலறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது உதவும் என்று ஸ்பெயினில் உள்ள ஜாம் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் தலைவர் ஜுவானா மரியா தெரிவித்தார். 

வெளிப்புற மாசைக் கட்டுப்படுத்த மட்டுமே பல்வேறு நாடுகள் அக்கறை காட்டி வரும் நிலையில் வீட்டிற்குள் ஏற்படும் இந்த காற்று மாசைக் குறைக்க விதிகளை வகுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

மின்சாரத்தைப் பயன்படுத்தி சமைக்க வலியுறுத்தும் ஆய்வாளர்கள், கேஸ் அடுப்புகளில் சமைக்கும்பட்சத்தில் நச்சுத் துகள்கள் வெளியேற காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள அறிவுறுத்துகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com