உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் போராடி வருகின்றனர்.
ஊட்டச்சத்துள்ள குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதுடன் போதிய உடற்பயிற்சி செய்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.
அந்தவகையில், ஊட்டச்சத்துக்கள், நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவோகேடா (வெண்ணெய் பழம்) உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!
♦ அவோகேடாவில் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பி நிறைந்துள்ளன,
♦ ஒரு அவோகேடாவில் 114 கலோரிகள் மட்டுமே உள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக்(சர்க்கரை அளவு) கொண்டுள்ளது. நிறைவுறா கொழுப்பை நிறைவுற்ற கொழுப்பாக மாற்றி இன்சுலின் அளவை மேம்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
♦ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, பசியைக் குறைக்கிறது. இதனால் உண்ணும் உணவின் அளவு குறைகிறது.
♦ நார்ச்சத்து நிறைந்தது. குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
♦ இதய நோய், பக்கவாதம், குடல் புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
♦ தனியாக பழச்சாறாகவும் அல்லது சாலட், ரொட்டி, சூப் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
இதையும் படிக்க | தினமும் 10,000 அடிகள் நடந்தாக வேண்டுமா? மகிழ்ச்சியான புதிய தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு... எய்ம்ஸ் நிறுவனத்தில் 2218 நர்சிங் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?

கேலி பண்றீங்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்! கோபமடைந்த அமைச்சர் மரியவில்சன்!

கடற்கரைகளில் இலவச வைஃபை வசதி! சென்னை மாநகராட்சி திட்டம்
விடியோக்கள்

சி.வி. சண்முகம் விடுத்த சவால்! ஏற்பாரா எடப்பாடி பழனிசாமி?


