ஓபன்ஏஐ நிர்வாக குழு பொறுப்பிலிருந்து மைக்ரோசாஃப்ட் விலகல்: என்ன காரணம்?

செயற்கை தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐயின் நிர்வாக குழுவில் பார்வையாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு
ஓபன்ஏஐ கருத்தரங்கில் நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் (இடது) மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா | கோப்புப் படம் (ஏபி)
ஓபன்ஏஐ கருத்தரங்கில் நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் (இடது) மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா | கோப்புப் படம் (ஏபி)
Published on
Updated on
1 min read

சாட்ஜிபிடி உள்ளிட்ட வலிமையான செயற்கை தொழில்நுட்ப தளங்களை உருவாக்கியுள்ள ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து மைக்ரோசாஃப்ட் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களுக்கு பிறகு நிறுவனம் சாதகமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இன்னமும் தங்களின் பங்களிப்பு தேவையிருக்காது என மைக்ரோசாஃப்ட் விலகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த கடித்தத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தாங்கள் வகித்த பார்வையாளர் (அப்சர்வர்) என்கிற பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளாது.

செய்யறிவு நிறுவனத்தின் தலைமையும் நிர்வாக குழுவும் தங்களின் இந்த முடிவுக்கு ஆதரவளித்ததை பாராட்டியுள்ள மைக்ரோசாஃப்ட், கடந்த 8 மாதங்களாக புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக குழுவின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நிறுவனம் செல்லும் பாதையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட பார்வையாளர் என்கிற பொறுப்புக்கு இனி அவசியமில்லை எனவும் மைக்ரோசாஃப்ட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஓபன்ஏஐ கருத்தரங்கில் நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் (இடது) மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா | கோப்புப் படம் (ஏபி)
அலுவலகங்களில் ஐபோன் மட்டுமே: மைக்ரோசாஃப்டின் அறிவிப்புக்கு என்ன காரணம்?

ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையில்லா விசாரணைக்கு மத்தியில் இந்த விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் 13 பில்லியன் அமெரிக்க டாலர் ஓபன்ஏஐ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. மேல்மட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஏஐ நிறுவனங்களின் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) குறித்து ஐரோப்பிய யூனியன் ஆழமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம், பிரிட்டன் போட்டி ஆணையம் அமைப்புகளும் ஆய்வு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது ஓபன்ஏஐ.

ஓபன்ஏஐ தனது முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், த்ரைவ் கேப்பிடல், கோஸ்லா வென்சர்ஸ் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கும் அணுகுமுறை கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com