இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

ஆண்களுக்கான தலைமுடி, சருமப் பராமரிப்பு! தினமும் செய்ய வேண்டியது என்ன?

ஆண்களுக்கான சருமப் பராமரிப்பு பற்றி...

hair fall

கோப்புப் படம் - ANI

Updated On :

பெரும்பாலும் அழகுக் குறிப்புகள், அழகு தொடர்பான ஆலோசனைகள் பெண்களுக்குத்தான் அதிகம் பகிரப்படுகிறது. ஆனால், ஆண்களும் தற்போது சரும ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏனெனில் முன்பெல்லாம் ஆண்கள், முடி வெட்டுவதற்கு, ஸ்ப்ரே அடித்துக்கொள்வதற்கு மட்டும் அவ்வப்போது முடி திருத்தும் கடைகளை நாடுவார்கள். இப்போது பேஷியல் உள்ளிட்ட மற்ற அழகு சேவைகளுக்கும் செல்கிறார்கள்.

விழாக்களில் கலந்துகொள்ளும் நேரம் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் ஆண்கள் தங்கள் அழகில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களும் அன்றாட சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆண்களுக்கான அழகு நிலையங்கள்கூட அதிகரித்து வருகின்றன.

ஆண்கள் தங்கள் அழகை பராமரிக்க செய்ய வேண்டியது என்ன?

சருமப் பராமரிப்பு

சமூக ஊடகங்களில் மற்றவர்கள் பரிந்துரைக்கும் அல்லது பிரபலமான தயாரிப்புகள் என்றில்லாமல், உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு நீங்கள் அழகு சாதனப் பொருள்களைத் தேர்வு செய்ய வேண்டும். சருமத்தில் உள்ள வியர்வை, அழுக்கு, எண்ணெய்யை அகற்றும் அதேநேரத்தில் ரசாயனம் குறைந்த அழகு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். பிஹெச் சமநிலை கொண்ட தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது.

சாலிசிலிக் அமிலம் இருக்கும் பேஷியல் ஸ்க்ரப் - களை வாரத்திற்கு ஓரிரு முறை பயன்படுத்தலாம். இது கரும்புள்ளிகளைத் தடுக்கும்.

வெளியில் செல்லும்போது மாய்ஸ்சரைசர், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

ஆண்கள் பெரும்பாலானோருக்கு அதிக வியர்வை இருக்கும் என்பதால் வியர்வை ஏற்பட்டால் உடனடியாக துடைக்க வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். வெளியில் சென்றுவந்த பிறகும் பேஸ்வாஷ் கொண்டு முகத்தைக் கழுவும்போது சருமத்தில் அழுக்குகள் சேராது.

ஷேவிங் செய்யும்போது சரியான ஷேவிங் க்ரீம் தயாரிப்புகள், தரமான ரேசர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு ஷேவிங் செய்து பின்னர் மாய்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

தலைமுடி பராமரிப்பு

உங்களுக்கு எந்த அளவுக்கு வியர்வை ஏற்படுகிறது என்பதைப் பொருத்து நீங்கள் வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்.

அதிக வியர்வை, வெய்யிலில் வேலை செய்பவர்கள் எல்லாம் தினமும்கூட தலைக்கு குளிக்கலாம். ஏனெனில் அதிக வியர்வை, பொடுகை ஏற்படுத்தும். இதனால் முடி உதிர்தல் ஏற்படும்.

நீங்கள் சரியாக பராமரிப்பு செய்தும் தலைமுடி உதிர்ந்தால் நிபுணரை அணுகி உங்களுக்கு ஏற்றவாறு தயாரிப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். என்ன காரணத்தினால் முடி உதிர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய வேண்டும்.

முகத்தில் தலைமுடி படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள், முகத்தில் அதிக முடி வேண்டாம், அவ்வப்போது ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

ஒரே மாதிரியான தயாரிப்புகள், ஒரே பராமரிப்பு முறைகளை தொடர்ந்து செய்வது நல்ல பலனளிக்கும்.

தலையில் ஹெல்மெட் அணியும்போது தலையுறை பயன்படுத்துங்கள்.

உணவும் உடற்பயிற்சியும்

இதுதவிர சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் இந்த மூன்றும் அவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சுத்தமான ஆடைகளை அணிவது, நகங்களை வெட்டிக்கொள்வது என தூய்மையைப் பராமரிக்க வேண்டும்.

Summary

Hair care, skin care for men: What should be done daily

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.