FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கிருஷ்ண ஜெயந்தி! வைர நகைகளுடன் ஜொலித்த நீதா அம்பானி!

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வைர நகைகளுடன் ஜொலித்த நீதா அம்பானியின் புகைப்படங்கள்..

நீதா அம்பானி

நீதா அம்பானி

Published On :5 செப்டம்பர் 2026, 3:18 pm IST

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், முகேஷ் - நீதா அம்பானி வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.

கடல் நீல நிற புடவையில் ஜரிகையில் வேலைப்பாடு செய்யப்பட்ட புடவையுடன் அதற்கு ஏற்ப தலையலங்காரம் செய்திருந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த வைர நகைகள் பார்ப்பவர்களை மிரளச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.

நீதா அம்பானி எப்போதுமே தனித்துவமான ஆடை அலங்காரங்களை விரும்புவார். அவர் பங்கேற்கும் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவரது ஆடைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துவிடும்.

அந்த வகையில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி என வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அம்பானி வீட்டில் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டு வீடு முழுக்க அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

கொண்டாட்ட விடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருந்தது.

அந்த வகையில், நீதா அம்பானி அணிந்திருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்த பாந்தினி புடவையாம். கடல் நீல நிறப்புடவையில் தங்க நிற ஜரிகையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலை அலங்காரத்துக்கும் நீதா அம்பானி வைர நகைகளையே தேர்வு செய்திருந்தாராம். ஆடையின் அளவான நிறத்துக்கு, கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் அவர் தன்னுடைய நகைப் பெட்டகத்திலிருந்து வைர நகைகளைத் தேர்வு செய்து அணிந்திருந்தார்.

இது குறித்த விடியோக்களும் புகைப்படங்களும் இன்று வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.