ஜப்பான்ல ஆஃபீஸ்லயே விவசாயம் பண்ணலாமாம்... இது புது டெக்னிக்கா இருக்கே!

இந்தத் திட்டத்தால் எங்கள் அலுவலகத்தில் இப்போது குறைந்த பட்சம் 80% ஊழியர்கள் ஆரோக்கியமானவர்களாக உணர்கிறார்கள். அது அவர்களது வேலையில் பிரதிபலிக்கிறது.
ஜப்பான்ல ஆஃபீஸ்லயே விவசாயம் பண்ணலாமாம்... இது புது டெக்னிக்கா இருக்கே!
Published on
Updated on
2 min read

அலுவலக வரவேற்பறை பகுதியில் நெல் வயல், கான்ஃபரன்ஸ் ஹாலில் தக்காளிச் செடிகள் என்று எங்காவது கண்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அலுவலகம் இயங்குமா என்ன? உங்களுக்குச் சந்தேகம் வரலாம். ஆனால் இப்படி வித்யாசமான அலுவலகம் உலகில் எங்குமே காண்பதற்கில்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் எங்கும், எதிலும் உலக நாடுகளுக்கு முன்னோடிகளாக விளங்கக் கூடிய ஜப்பானில் இது சாத்தியப்பட்டிருக்கிறது. ஜாப்பானில் பசோனா குழுமம் நிர்வகிக்கும் ’மேஜையில் பண்ணை’ எனும் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அலுவலகத்தில் இந்த காட்சிகளை எல்லாம் காண முடிகிறது. இங்கு பணிபுரியும் அலுவலர்களில் ஒருவரான பிர்யன் ரஸ்ஸல் இது குறித்துப் பேசுகையில்; ‘வேலைக்கு நடுவே இம்மாதிரியான புது முயற்சிகளை நடத்த முடியும் என்பது எங்களுக்கு அற்புதமான முயற்சியாக மட்டுமல்ல மிக மிக வித்யாசமான முயற்சியாகவும் தோன்றுகிறது. என்கிறார்.

ஜப்பானைச் சேர்ந்த மனித வளம் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான பசோனா குழுமம்  இந்த வித்யாசமான முயற்சிக்காக டோக்கியோவில் சுமார் 1 ஏக்கரில் அமைந்த தனது அலுவலகம் ஒன்றைத் தாரை வார்த்துள்ளது. இங்கு 280 வகையான காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள், மலர்கள் உள்ளிட்டவை நடப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. இங்கு பணிபுரியும் 1,500 அலுவலக ஊழியர்களும் தங்களது வேலையினூடே இந்தச் செடிகளை நடுவதும், உரமிட்டு வளர்ப்பதும், அறுவடை செய்வதுமான பணிகளைப் பகிர்ந்துகொண்டு அதிலிருந்து கிடைக்கும் பலனையும் பகிர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். அலுவலக ஊழியர்கள் வேஅலியையும் செய்து கொண்டு இப்படி தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே தங்களது அலுவலக வளாகத்தில் பயிர் செய்து அறுவடை செய்து கொள்வது என்பது உலகின் மிகப் புதுமையான முயற்சிகளில் ஒன்று என்பது நிஜம். உலகில் வேறெங்குமே இப்படியொரு வித்யாச முயற்சி இதுவரை இல்லை. 

பசோனாவின் குழுமத்தின் நகர விவசாயத் திட்டத்தின் (Urban Farming) இயக்குனரான Motonobo Sato இது குறித்துப் பேசுகையில்; “இந்த திட்டத்தின் அடிப்படை... ‘ஆரோக்கியம் மற்றும் சூழல் மீதான அக்கறையின் காரணமாக விவசாயம்’ என்பது மட்டுமே. இந்தத் திட்டத்தால் எங்கள் அலுவலகத்தில் இப்போது குறைந்த பட்சம் 80% ஊழியர்கள் ஆரோக்கியமானவர்களாக உணர்கிறார்கள். அது அவர்களது வேலையில் பிரதிபலிக்கிறது. எனவே இந்த 9 மாடிகள் கொண்ட அலுவலகத்தில் சுமார் 1 ஏக்கர் அளவிலான பரப்பை நாங்கள் பசுமையான தாவரங்களை வளர்ப்பதற்கு என அர்ப்பணித்து விட்டோம். இதற்காக நாங்கள் ஆற்றலுடன் கூடிய விளக்குகளைப் பயன்படுத்துகிறோம், பாசனத்திற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்... அதோடு மட்டுமல்ல இங்கு விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு தயாரான உணவுப் பொருட்களை எங்களது அலுவலகத்தின் உணவுக் கூடத்தில் நாங்களே சமைத்து எங்களது ஊழியர்களுக்கு வழங்குகிறோம்.” என்கிறார்.

இந்த முறையைப் பற்றி சிலாகிக்கும் மற்றொரு பெண் ஊழியர் கூறுவது என்ன தெரியுமா? “தினமும் அலுவலகத்திற்கு வந்து வேலைகளுக்கு நடுவே இப்படி செடி கொடிகளை நட்டு அவை சிறு விதையிலிருந்து செடியாக வளரும் முறையைக் கவனித்துக் கொண்டே இருந்து பின் அறுவடை நாள் வந்ததும் அதை நம் கைகளாலேயே பறித்து சுத்தம் செய்து சமைத்து உண்பது என்பது... எத்தனை சந்தோசமான விசயம் தெரியுமா?” என்கிறார்.

இதை வீடியோவாகக் காண... 

நிச்சயம் இது நமக்கெல்லாம் ஆச்சரியமான விசயம் தான். இந்தியா போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த நாட்டில் பிரமாண்டமான பெரிய பெரிய அலுவலகங்களுக்கெல்லாம் பஞ்சமே இல்லை. நிறையவே இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் ஜப்பானின் பசோனாவைப் போல ‘மேஜையில் பண்ணை’ நகர விவசாய முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு முயற்சியில்  இந்தியா இறங்கினால் நமக்கெல்லாம் சந்தோசமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com