அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் ‘ஆல்கஹால்’ அளவுடன் நிறுத்தினால் ஆரோக்ய பானம்! எப்படி?!

ஆல்கஹால் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் அந்த ஆல்கஹாலையும் அளவுக்கு மீறி அருந்தாமல் அளவறிந்து உட்கொண்டால் அது மருந்தாகிறது.
அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் ‘ஆல்கஹால்’ அளவுடன் நிறுத்தினால் ஆரோக்ய பானம்! எப்படி?!

முகநூலில்  ‘ஹெல்த்தி ஃபுட் சாய்சஸ்’ என்றொரு இணையப்பக்கம் உண்டு. அதில் அவ்வப்போது நமது நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் வகையில் சில தகவல்கள் வீடியோ பதிவு முறையில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாக நம்மால் மறுக்கவும் இயலாது. ஏற்றுக் கொள்ளவும் இயலாது. ஏனெனில் இந்திய உணவு மரபுப்படி எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி உண்டால் தான் அது நஞ்சாகக் கருதப்படும். சிலருக்கு ஒவ்வாமையால் சில உணவு வகைகள் மற்றும் பானங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதன்படி ஒவ்வொருவரும் உண்ணும் உணவு மற்றும் பான வகைகளை அவரவர் உடலின் ஜீரணத் தன்மைக்கு ஏற்ப அவரவர் உடல்நலனே தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் தான் நமது உணவுப் பழக்கங்கள் அமைகின்றன.

ஆல்கஹால் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் அந்த ஆல்கஹாலையும் அளவுக்கு மீறி அருந்தாமல் அளவறிந்து உட்கொண்டால் அது மருந்தாகிறது என்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். 

இன்றளவிலும் கிராமங்களில் கூட பிரசவமான பெண்களுக்கு சிறிதளவு சிவப்பு ஒயின் மற்றும் பிராந்தி அருந்தத் தருவது வழக்கத்திலிருக்கும் ஒரு பழக்கம் தான். அதற்காக அந்தப் பெண்களை குடிகாரிகள் என்று சுட்ட முடியாது. அது அப்பெண்களுக்கு சிறந்த வலி நிவாரணிகளாகவோ அல்லது பிரசவகாலத்தில் நெகிழ்ந்த உடற்சருமத்தை பொலிவாக்கக் கூடிய மருந்தாகவோ அம்மக்களால்
கருதப்பட வாய்ப்புண்டு. எனவே இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் விஷயத்தை யாரும் தவறுதலாகச் செயல்படுத்தாமல் உடல் ஆரோக்யத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுத்திப் பார்க்கலாம்.

இது கிட்டத்தட்ட அறுவை சிகிச்சையின் போது வலி நீக்கியாகத் தரப்படும் அனஸ்தீஸியா போன்றதே! அந்த வகையில் எடுத்துக் கொண்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆல்கஹால் வகைகளை அளவறிந்து அருந்துவோருக்கு அது மாமருந்து. அளவுக்கு மீறி அருந்தினால் அது விஷம்!

வெவ்வேறு விதமான ஆல்கஹால் பானங்களினால் கிடைக்கக் கூடிய பலன்கள்...

  • ரம் அருந்தினால் தொண்டை வறட்சி மற்றும் தொண்டை வறண்டு போவதால் ஏற்படும் கரகரப்பு இரண்டுமே தீரும்.
  • சில மது வகைகளை ஒன்றாகக் கலந்தால் கிடைக்கும் டெக்கீலா அருந்தினால் அது உடல் கொழுப்பை சீராக்குமாம்.
  • சிவப்பு ஒயின் ஹைப்பர் டென்சனைக் குறைக்க உதவுகிறதாம்.
  • விஸ்கி அருந்தினால் உடல் எடை குறையுமாம்.
  • பிராந்தி அருந்தினால் வயது முதிர்வால் ஏற்படக்கூடிய முதுமைத் தோற்றம் தாமதப்படுமாம்.
  • சாம்பெய்ன் அருந்தினால் இதய ஆரோக்யத்துக்கு நல்லதாம்.
  • வோட்கா அருந்தினால் பல் வலி குறையுமாம்.
  • பீர் சாப்பிட்டால் மூளையின் செயல் திறன் அதிகரிக்குமாம்.

பீர் அருந்துவதற்கான WHO வரையறை...

வாரத்திற்கு ஓரிரு முறை பீர் அருந்துபவர்கள் எனில்;

  • ஆண்களுக்கு: 2 முதல் 3 பின்ட்ஸ் அதாவது 1 பாட்டிலும் மற்றொரு அரைபாட்டிலும் அருந்தலாம்.
  • பெண்களுக்கு: 1.5 பின்ட்ஸ் அல்லது ஒரு பாட்டிலுக்கும் குறைவாக அருந்தலாம்.

எப்போதாவது ஒருமுறை அருந்துபவர்கள் எனில்;

  • ஆண்களுக்கு: 4.5 பின்ட்ஸ் அல்லது இரண்டேகால் பாட்டில்கள் வரை...
  • பெண்களுக்கு: 3 பின் ட்ஸ் அல்லது ஒன்றரை பாட்டில்கள் வரை.

விஸ்கி, ரம், ஓட்கா போன்ற ஆல்கஹால் பானங்கள் அருந்துவதற்கான WHO வரையறை...

விஸ்கி, ரம், ஓட்கா போன்ற ஆல்கஹால் பானங்களை வாரத்தில் ஓரிரு முறைகள் எடுத்துக் கொண்டால் அதற்கான திட்டமிட்ட அளவு

  • ஆண்களுக்கு 2 முதல் 3 ஸ்மால்கள் என்றும்
  • பெண்களுக்கு எனில்2 முதல் 3 ஸ்மால்கள்

- எனவும்  WHO உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. ஆல்கஹால் மொழியில் ஸ்மால் என்றால் அதற்கான அளவுகோல் 30 மில்லி. லார்ஜ் என்றால் 60 மில்லி.

அதுவே வார, வாரம் முறை வைத்துக் கொண்டு அருந்தாமல் ஏதாவது விழாக்கள் மற்றும் ஸ்பெஷலான தருணங்களில் எப்போதாவது ஒரு முறை தான் அருந்தப் போகிறீர்கள் எனில்

  • ஆண்கள் 6 முதல் 3லார்ஜ்கள் வரை அருந்தலாமாம்.
  • பெண்கள் 4 ஸ்மால் அல்லது 2 லார்ஜ்கள் அருந்தலாம் என்கிறது WHO.

ஒயின் அருந்துவதற்கான WHO வரையறை...

வாரத்திற்கு ஓரிருமுறை தவறாமல் ஒயின் அருந்துபவர்கள் எனில்... 

  • ஆண்களுக்கு: 2 முதல் 2.5 ஸ்டேண்டர்ட் கிளாஸ் ( ஒரு ஸ்டேண்டர்டு கிளாஸ் அளவு என்பது 150 முதல் 175 மில்லி ஒயினைக் குறிக்கும்) 
  • பெண்களுக்கு: 1.5 ஸ்டேண்டர்டு கிளாஸ்

எப்போதாவது மட்டும் தான் அருந்துவீர்கள் எனில்;

  • ஆண்களுக்கு: 3.5 ஸ்டேண்டர்டு கிளாஸ் முதல் அரை பாட்டில் வரை
  • பெண்களுக்கு: 2.5 ஸ்டேண்டர்டு கிளாஸ் முதல் கால்பாட்டில் வரை.

இது தான் உலக சுகாதார நிறுவனம் ஆல்கஹால் அருந்துவதற்கென அனுமதித்துள்ள அளவீடு. ஆனால் மது அருந்துபவர்கள் எல்லோரும் இந்த அளவீடுகளை மதித்துத் தான் அருந்துகிறார்கள் எனில் நம் நாட்டில் மதுக்கடைகளால் பலரது வாழ்வு நிர்மூலமாகி இருக்க வாய்ப்பே இல்லை. எனவே எதையும் மருந்தாக நினைத்து அருந்தும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் நிறைவாக இருக்கும். அதுவே எந்த எச்சரிக்கைகளையும் மதிக்காமல் போதைக்கு அடிமையாகி நாமாக முடிவெடுத்துக் கொண்டு அளவுக்கு மீறி அருந்தினால் அது நிச்சயம் நஞ்சாகத்தான் மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com