இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்கள் போலத்தான் அணுகுகிறார்கள், நம்பி விடாதீர்கள்: வங்கி அதிகாரி எச்சரிக்கை!

இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்களைப் போல ஜம்மென்று இருக்கிறார்கள் எனவே பொதுமக்கள் அப்படிப்பட்ட ஆட்களைக் கண்டு நம்பி ஏ டி எம் கார்டுகளைக் கொடுத்து ஏமாறி விட வேண்டாம்.’
இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்கள் போலத்தான் அணுகுகிறார்கள், நம்பி விடாதீர்கள்: வங்கி அதிகாரி எச்சரிக்கை!

பெங்களூரு, பாப்பரெட்டிபாள்யா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற் கல்லூரிப் பேராசிரியையான ராதா எனும் பெண்மணி (69) கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள ஏ டி எம் நிலையமொன்றில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். தொழில்நுட்பக் கோளாறுகளால் மெஷினில் பணம் எடுக்க முடியாத நிலையில் தயங்கி நின்றவரை அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் அணுகியிருக்கிறார்.

நான் இந்த ஏ டி எம் நிலையத்தின் செக்யூரிட்டி கார்ட், என்னிடம் உங்கள் கார்டைத் தாருங்கள் நான் மீண்டும் சோதித்துப் பார்க்கிறேன் என்று நயமாகப் பேசி கார்டை வாங்கி மெஷினில் சொருகி பணம் எடுக்க உதவுவது போல நடித்திருக்கிறார். ராதாவுக்கு அப்போது லேசாகச் சந்தேகம் எழவே, ‘ஏ டி எம் நிலைய செக்யூரிட்டி என்றால் சீருடை அணிந்திருக்க வேண்டுமே?’  என்று கேள்வி கேட்டிருக்கிறார். 

அதற்கு அந்த இளைஞர், ‘அம்மா, நான் இப்போது தான் பணிக்கு வந்திருக்கிறேன், என் சீருடை ஏ டி எம் மெஷினின் பின்புற அறையில் இருக்கிறது. உங்களுக்கு உதவி விட்டு பிறகு சென்று நான் சீருடை அணிந்து கொள்வேன்’

-  என மிகவும் நயமாகவும் பணிவாகவும் பதில் கூறி இருக்கிறார். 

இந்த பதிலில் சற்று சமாதானமடைந்த ராதா, அந்த இளைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது டெபிட் கார்டின் பின் நம்பர்களை மெஷினில் எண்ட்டர் செய்திருக்கிறார். இதை ராதா அறியாமல் ரகசியமாகக் கவனித்து குறித்து வைத்துக் கொண்டான் அந்த இளைஞன். இம்முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பணம் எடுக்க முடியாது என ஏடிஎம் திரை ஒளிரவே, கார்டை மெஷினில் இருந்து வெளியில் எடுத்து ராதாவிடம் ஒப்படைத்திருக்கிறான் அந்தப் புதிய இளைஞன். 

பணம் எடுக்க முடியாமல் ராதா வீடு திரும்பிய அன்று மாலை ராதாவின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. உங்களது கணக்கில் இருந்து 40,000 ரூபாய் பணம் பெங்களூரு நகர்பவி ஏ டி எம் மெஷின் மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று. ராதா நிஜமாகவே ஆச்சர்யப்பட்டுப் போனார். தான் பணம் எதுவும் எடுக்க முடியாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று அவருக்கு குழப்பமாக இருந்திருக்கிறது. மறுநாள் காலை மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அதில் மேலும் 40,000 ரூபாய் ராதாவின் எஸ் பி ஐ வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்ப்ட்டிருப்பதாகத் தகவல் இருந்தது. அதன் பின் வெகு விரைவிலேயே மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. இப்போதும் ரூ 40,000 பணத்தை ராதாவின் கணக்கில் இருந்து ஏம் டி மெஷின் மூலமாக யாரோ எடுத்ததாக குறுஞ்செய்தி.வந்திருந்தது. மொத்தம் 1. 2 லட்சம் ரூபாய்கள் ஸ்வாஹா. 

ராதாவும் அவரது கணவரும் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள். அவர்களது சேமிப்பில் இருந்த மொத்தப் பணமும் இப்போது காலி. வயது காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ ராதா உடனடியாக வங்கிக்குச் சென்று புகார் அளிக்கத் தவறியதாலும், தன்னுடைய டெபிட் கார்டை பிளாக் செய்யத் தவறியதாலும் மொத்தமாக குறுகிய காலத்தில் பெரும்பணம் இழந்து விட்டார். சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பின் ராதா வங்கியை அணுகிப் புகார் அளித்ததில் இப்போது அவரது கார்டு பிளாக் செய்யப்பட்டும் எவ்விதப் பயனுமில்லை, பணம் போனது போனது தான். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், ராதாவுக்கு வங்கி அதிகாரி அளித்த அறிவுரை தான்.

‘இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்களைப் போல ஜம்மென்று இருக்கிறார்கள் எனவே பொதுமக்கள் அப்படிப்பட்ட ஆட்களைக் கண்டு நம்பி ஏ டி எம் கார்டுகளைக் கொடுத்து ஏமாறி விட வேண்டாம்.’ எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவர் ஒருவரும் தங்களது ஏ டி எம் கார்டு பின் நம்பர்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. புதியவர்களை நம்பி தங்களது ரகசிய எண்களைக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் போது தான் இத்தகைய மோசடிகள் நடக்கின்றன. எனவே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏ டி எம் மெஷின்களில் பணம் எடுக்க முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வங்கியின் கஸ்டமர் கேர் நிறுவனத்தையோ அல்லது நேரடியாக வங்கியையோ தான் அணுக வேண்டுமே தவிர, உதவி செய்வதாகச் சொல்லி அணுகும் புதியவர்களை அல்ல’ என்று அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார்.

அவர் சொன்ன எச்சரிக்கையில் பிற எல்லாவற்றையும் விட முக்கியமானது;

‘இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்கள் போல இருக்கிறார்கள், எளிதில் நம்பி மோசம் போய் விட வேண்டாம்’ என்பது தான்.

தற்போது ராதா அளித்த புகாரின் அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட ஏ டி எம் நிலையைத்தின் சி சி டி வி ஃபூட்டேஜ் காட்சிகள் சோதிக்கப்பட்டதில் சில தடயங்கள் சிக்கி அதன் அடிப்படையில் அவ்வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகத் தகவல். 

Related Article

வால்நட்டில் போதை மருந்து கடத்திய பெண்! கடத்தல்காரர்கள் 8 அடி பாய்ந்தால் கஸ்டம்ஸ்காரர்கள் 16 அடி பாய்ந்தாக வேண்டிய நிர்பந்தம்!

ஒட்டகச் சிவிங்கிக்கு பிரசவம் பார்க்கறதுன்னா சும்மாவா? குட்டி 5 அடி உயரம், 30 கிலோ எடையாக்கும்!

அதிர்ச்சியில் உறைய வைக்கும் சால்வடார் புகைப்படம்... புதைந்து போன அப்பா, மகளின் அமெரிக்க கனவுகள்!

‘ட்ரிமேன் சிண்ட்ரோம்’ வலி தாங்க முடியவில்லை என் கைகளை வெட்டி விடுங்கள் எனக் கதறும் வங்க தேசத்து இளைஞர்!

கல்யாணத்துக்கு மட்டும் தான் அனுமதி குப்பைக்கு இல்லை... கட்டுங்க ஃபைன்! குப்தா ஃபேமிலியிடம் கறார் காட்டிய உத்தரகாண்ட் முனிசிபாலிட்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com