உடல் எடை அதிகரிப்பா? அலுவலகத்தில் செய்யக்கூடிய 5 விஷயங்கள்!

அலுவலங்களில் வேலை செய்வோர் பலரும் இன்று உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்கின்றனர். உடல் இயக்கமின்றி இருப்பதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 
உடல் எடை அதிகரிப்பா? அலுவலகத்தில் செய்யக்கூடிய 5 விஷயங்கள்!
Published on
Updated on
2 min read

அலுவலங்களில் வேலை செய்வோர் பலரும் இன்று அமர்ந்த நிலையிலேயே வேலை செய்கின்றனர். உடல் இயக்கமின்றி இருப்பதால் உடலில் கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிப்பு முதல் இதய நோய்கள் வரை பலவித நோய் அபாயங்கள் ஏற்படுகின்றன. 

மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான நேரம் அலுவலகத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் உங்களின் உடல்நிலை குறித்தும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். 

நன்கு உடல் எடை அதிகரித்த பின்னர் உடற்பயிற்சி செய்வதைவிட அவ்வப்போது உடலை இயக்கத்தில் வைத்திருப்பது உடல்நலனுக்கு சிறந்தது. 

அலுவலகத்தில் வேலை செய்யும்போதே உங்கள் உடல்நலத்திலும் சிறிது கவனம் செலுத்தினால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 

அந்தவகையில் பலரும் இன்று வேலை இடத்தில் சென்று அமர்ந்துவிட்டால் இடைவேளைக்குக்கூட எழுந்திருப்பதில்லை. அந்த அளவுக்கு பணியில் மூழ்கிவிடுவதுண்டு. ஆனால், உடலுக்கு அசைவு கொடுக்க வேண்டும் என்று மணிக்கு ஒருமுறையாவது மனதில் தோன்றும்படி அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். 

அந்தவகையில், அலுவலகத்தில் உடல் அசைவை ஏற்படுத்த என்ன செய்யலாம்? இதோ சில எளிய வழிகள்: 

படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்: அலுவலகத்தில் மின்தூக்கிக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். படிக்கட்டுகளில் செல்வது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இது இதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது,

பணியில் சலிப்பாக உணர்ந்தாலோ அல்லது இடைவேளை நேரத்திலோ படிக்கட்டுகளில் ஒருமுறை ஏறி, இறங்குங்கள். 

இடைவேளை நேரம்: அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டியிருந்தால் அவர்களை அலுவலகத்தின் உள்ளோ, வெளியிலோ நடந்து அழைத்துச் சென்று விவாதிக்கலாம். இது உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். 

அதுபோல இடைவேளை நேரத்திலும் ஓரிடத்தில் அமர்ந்திருக்காமல் முடிந்தவரை வெளியில் நடந்து சென்று வரலாம். 

காணொலி கூட்டம்: நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தால் காணொலி அழைப்புகள் மூலமாக கூட்டங்கள் இருந்தால், ஏதாவது ஒரு அழைப்பில் நடந்துகொண்டே பேசுங்கள். திரையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றால் ஹெட்போனை மட்டும் காதில் சொருகிக்கொண்டு நடந்துகொண்டே கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். இல்லையெனில் செல்போனை கையில் வைத்துக்கொண்டு நடக்கலாம். 

கண்டிப்பாக மணிக்கு ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் நடப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  

பார்க்கிங்: அலுவலகத்தில் உங்கள் வாகனங்களை உங்களின் இருப்பிடத்தில் இருந்து முடிந்தவரை தூரமாக நிறுத்துங்கள். வாகன நிறுத்தத்தில் இருந்து உங்கள் பணியிடத்திற்கு நடந்து செல்லுங்கள். அதிக தொலைவு கொண்ட வழியையும் பயன்படுத்தலாம். 

பொதுப் போக்குவரத்து: அவ்வப்போது பொதுப் போக்குவரத்திலும் அலுவலகத்திற்கு வரலாம். ஏனெனில், வீட்டிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலுள்ள தூரம், அதுபோல பேருந்து நிறுத்தத்திற்கும் அலுவலகத்திற்கும் இடையிலுள்ள தூரம் நீங்கள் நடக்க முடியும். 

விளையாட்டு: சில அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் இணைந்து விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அம்மாதிரியான ஒன்றை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கெனவே இருந்தால் கலந்துகொள்ளலாம். கிரிக்கெட், கால் பந்து என்று ஏதேனும் ஒரு விளையாட்டில் அரை மணி நேரம் கவனம் செலுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com