டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெள்ளிக் கொலுசு அணிவதன் பின்னணியில் உள்ள ஆச்சரியங்கள்!

பெண்கள் கொலுசு அணிவதால் என்னென்ன நன்மைகள் உள்ளதென்று தெரிந்துகொள்ளலாம்..

News image
வெள்ளி கொலுசு
Updated On :19 செப்டம்பர் 2024, 3:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த வெள்ளி பொருள்களில் 34 சதவீதம் வெள்ளி கொலுசுகளாகத்தான் இருக்கும். உச்சி முதல் தங்க நகைகளை இழைத்து வைத்தாலும், காலில் பொதுவாக பெண்கள் தங்கத்தை அணிவதில்லை.

காலில் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி மெட்டியை அணிவதைத்தான் பெண்கள் பல காலமாக பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு காலில் கொலுசு அணிவதன் பின்னணியில் என்னதான் கலாசாரம், பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கான காரணிகளும் அடங்கியுள்ளன.

ஒருவரது உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. பொதுவாக நமது உடலில் இருக்கும் ஆற்றலானது கை மற்றும் கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் கால்களில் வெள்ளி நகைகளை அணிகிறோம்.

பெண்கள் பல மணி நேரம் சமையலறையில் நின்று கொண்டு சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், கால்களில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. நெடு நேரம் நிற்பதால் ஏற்படும் வலியானது கீழ் முதுகுத் தண்டுவடத்தின் வழியாக கால்கள் முழுக்க பரவும்.

இதுபோன்ற சமயங்களில், கால்களில் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம், கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டதை அதிகரிப்பதோடு, நமது உடலின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்கள் பலமிழந்துப் போவதிலிருந்து காத்து, பாதங்களை மேம்படுத்துகிறது.

இது மட்டுமல்ல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் வெள்ளி அதிகரிக்கும், முக்கிய சுரப்பிகளை சமநிலையில் வைத்திருக்கவும், கருப்பையை ஆரோக்கியமாக பேணவும் வெள்ளி கொலுசு உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் இந்தியாவில் பெண்கள் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி மெட்டி போன்றவற்றை அணிகிறார்கள் என்பது புரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.