
உடலுக்குத் தேவையான சத்துக்களில் மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. புரதங்கள், அமினோ அமிலங்களால் ஆனவை.
சுமார் 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் இருப்பதாகவும் இவை தசை, எலும்புகள் உருவாக்கம் மற்றும் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையைக் குறைக்கவும் உடலின் ஆற்றலுக்கும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடவே நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். பலரும் டயட்டுக்கு புரதம் நிறைந்த உணவுகளையே எடுத்துகொள்கின்றனர்.
இந்நிலையில் காலையில் எழுந்தவுடன் புரதச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு வலுவை அளிக்கும், சுறுசுறுப்பாக இயங்க உதவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள் என்னென்ன?
-> பழங்கள், கீரை, பால் அடங்கிய ஸ்மூத்தி ஒரு டம்ளர் அருந்தலாம். இதில் 100 கிராமில் 70 கிராம் புரதம் உள்ளது.
-> அரிசி, கோதுமைக்குப் பதிலாக குயினோவா தானியம் எடுத்துக்கொள்ளலாம். குயினோவா புரதச்சத்து நிறைந்த தானியம். 100 கிராம் குயினோவாவில் 8 கிராம் புரதம் உள்ளது.
-> 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதம் உள்ளது. பாதாமை தனியாக ஊறவைத்தும், ஓட்ஸ் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
-> வேர்க்கடலை வெண்ணெய்(Peanut butter) 100 கிராமில் 25 கிராம் புரதம் மற்றும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் உள்ளன. பழங்கள், ஸ்மூத்திகளுடன் சேர்த்தோ ரொட்டியில் தடவியும் சாப்பிடலாம்.
-> சியா விதைகள் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்தைத் கொண்டிருக்கின்றன. 100 கிராமில் 17 கிராம் புரதம் இருக்கிறது. தயிர், ஓட்ஸ், ஸ்மூத்திகளில் கலந்து சாப்பிடலாம்.
-> 100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரதம் உள்ளது. சாலட், ரேப் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
-> புரதம் நிறைந்த பொருள்களில் முக்கியமான ஒன்று முட்டை. அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பெறக்கூடியது. 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் உள்ளது. முட்டையை அவித்தோ ஆம்லெட் வடிவிலோ சாப்பிடலாம்.
-> கெட்டித் தயிர் 100 கிராமில் 10 கிராம் உள்ளது. பழங்களுடன் அல்லது உணவில் சேர்த்துச் சாப்பிடலாம்.
-> 100 கிராமில் 17 கிராம் புரதம் உள்ள ஓட்ஸையும் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
-> சோயா விதையில் இருந்து தயாரிக்கப்டும் டோஃபு(8 கிராம்/100 கிராம்) காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
-> புரதம் நிறைந்த முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் எந்தவகையிலும் எடுத்துக்கொள்ளலாம்.