மத்திய பட்ஜெட் 2020 : சிறப்பு அம்சங்கள்

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் 2020 : சிறப்பு அம்சங்கள்


2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதன் சிறப்பு அம்சங்கள்..

 எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும்.

 கூட்டுறவு வங்கி விதிகளில் பெருமளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.


வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் போது மேற்கொள்ளும் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக உயர்த்தப்படும்.

வங்கிகள் திவாலானால் வைப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.


மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசைக் குறைக்க ரூ.4,400 கோடி ஒதுக்கீடு.

 வரி என்ற பெயரில் மக்களை சித்ரவதை செய்வதை ஏற்கவே முடியாது.

நாட்டிற்கு வரி செலுத்தும் மக்களுக்கு மத்திய அரசு நேர்மையாக இருக்கும்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

தொல்லியல் துறையில் சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சுற்றுலாத் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
ராஞ்சியில் பழங்குடியினருக்கான  அருங்காட்சியகம் அமைக்க முடிவு.
5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வதுஇடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்தியாவில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகள் மேம்படுத்தப்படும். 

நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டிய திருக்குறள்

 'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து' - என்ற குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

 சிறந்த நாடு குறித்து திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன்

பெண் குழந்தைகள் திட்டத்தில் பெரும் மாற்றம்

பெண் குழந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளை அதிக அளவில் பள்ளியில் சேர்க்கிறார்கள்.
பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும் போது நிர்பயா நிர்பயா என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலனடையும்.
பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும் போது நிர்பயா நிர்பயா என்று எதிர்க்கட்சிகள் முழக்கம்

 குழாய் வழியே சமையல் எரியாவு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

அதன்படி, எரிவாயு குழாயை எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடங்கள் 16,200 கிலோ மீட்டர்  தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும்.

 மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

தேசிய எரிவாயு குழாய் தட திட்டம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்படும்.
மின்சாரத்தைக் கணக்கெடுக்கும் மின்மீட்டர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை.
தனியார் சார்பில் தகவல் மைய பூங்காக்கள் அமைக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.
ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இணைக்க நடவடிக்கை. அதன்படி, 1 லட்சம் கிராமங்களுக்கு ஃபைபர் ஆப்டிகள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேமிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.
ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்படும்.
அரசு - தனியார் பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம்.

ரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள்

ரயில் பாதையை ஒட்டிய ரயில் துறைக்கு சொந்தமான நிலப்பரப்புகளில் சூரிய மின் உற்பத்தி செய்யப்படும்.

27 ஆயிரம் கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.

சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ப்படும்.

பெங்களூருவில் ரூ.18,600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.

குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம்

தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விரைவில் சரக்கு போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படும்.
நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்றுமதியாளர்கள் பலன் பெறும் வகையில் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்.
2000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

 அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படும்.

சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
தேசிய தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள கல்வி நிறுவனங்கள் இணையவழிக் கல்வியை நடத்தலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒரு ஏற்றுமதி கேந்திரமாக வேண்டும் என்பது மோடியின் கனவு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பொறியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்படும்.

 உத்தரப்பிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி பயன்று சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு

இந்தியாவில் கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.
தேசிய காவல்துறை, தேசிய தடய அறிவியல் துறை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

நாடு முழுவதும் விரைவில் புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
பிரதமரின்  ஜன் ஆரோக்கியா திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை தொடர்பான அறிவிப்புகள்

 வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

பால், பழங்கள், காய்கறிகளை கொண்டுச் செல்ல தனி ரயில் இயக்கப்படும்.
2025ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக்க இலக்கு நிர்ணயம்.
விவசாயத்துறைக்கு ரூ.2.83 கோடி லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடியை குறிப்பிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் ஆத்திச்சூடியை குறிப்பிட்டுப் பேசினார். 
மூன்று மூன்று வார்த்தைகளில் பல முக்கிய விஷயங்களை ஔவையார் அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார்.
அதில் குறிப்பாக 'பூமி திருத்தி உண்' என்ற மூன்று வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

  • இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும்
  • தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
  • 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
  • மத்திய அரசின் கடன் குறைந்துள்ளது

    மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக் குறைந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.
    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் பேசிய நிர்மலா சீதாராமன்

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிர்மலா சீதாராமன், காஷ்மீர் மொழியில் பேசினார்.
    கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

    எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி

    எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல், 2020 முதல் அமல்படுத்தப்படும்.
    நடுத்தர குடும்பத்தின் வருவாயை அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்.

  •  இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது அதீத நம்பிக்யை ஏற்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
  • ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் மிகச் சிறந்த சாதனையாக உள்ளது.

  • இந்தியா தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.

  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடுத்தர குடும்பங்களின் அன்றாட செலவு 4% குறைந்து சேமிப்பாக மாறியுள்ளது.
  •  
  • சிறுபான்மையினர், பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும்.
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ​
    உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பட்ஜெட் நகல்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு அனுமதி​​​
    நிதியமைச்சர் நிர்லமலா சீதாராமன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நாடாளுமன்றம் வருகை​

    மத்திய பட்ஜெட் தாக்கல்

     2020 - 21ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
    மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரிண்ட் செய்யப்பட்ட பட்ஜெட் கோப்புகள் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டன.

     2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். 

    நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதை மேம்படுத்தும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யவிருக்கும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். 

    பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை

     மத்திய பட்ஜட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி.

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார்.

    வருமான வரி விகிதம் மாற்றம்

    புதிதாக குறைக்கப்பட்டிருக்கும் வருமான வரி விகிதங்கள் அனைவருக்கும் அப்படியே பொருந்தாது. அதில், வரி செலுத்துவோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது ஒருவர் தனக்கு ஏற்கனவே வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக்கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகையையே தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் பழைய விகிதப்படியே வரி செலுத்த வேண்டியதிருக்கும்.

    அல்லாமல், ஏற்கனவே இருக்கும் வரிச் சலுகைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, புதிய முறையை தேர்வு செய்து கொண்டால் மட்டுமே இந்த வரிக் குறைப்பு விகிதங்கள் பொருந்தும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    மிக நீண்ட பட்ஜெட்

    2020 - 21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளிலேயே மிக நீண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

    மத்திய பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை தொடர்ந்தார். ஆனால், திடீரென அவருக்கு அதிக வியர்வை ஏற்பட்டு, கடைசியாக இரண்டு பக்கங்கள் இருக்கும் போது தொடர்ந்து வாசிக்க முடியாமல், பட்ஜெட் உரையை சுருக்கமாக வாசித்து முடித்தார்.

    பான் அட்டை பெறும் நடைமுறை எளிதாக்கப்படும்

    வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவசியமாக பான் அட்டை பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் பான் கார்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு

    நிர்மலா சீதாராமன்  இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது.
    வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
    ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
    அதேப்போல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
    மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம்  வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
    ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
    ரூ.15 லட்சத்துக்கும் மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.

     நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    அரசின் நிதிப் பற்றாக்குறையானது 2019 - 20 ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாகவும், 2020 - 21 ஆம் நிதியாண்டில் 3.5% ஆகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
    பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
    தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கப்படும்.

     வரும் 2020 -21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 2020 - 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 10% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    நாட்டின் மூலதன செலவினங்கள் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    Related Stories

    No stories found.
    X
    Dinamani
    www.dinamani.com