மனைவிக்கு ஆதரவாக சாவி மாலை அணிந்து வாக்கு சேகரித்த கணவன்!
மனைவி செல்விக்கு ஆதரவாக அவரது சின்னமான சாவியை மாலையாக அணிந்து அவரது கணவன் ஊர்காவலன் வாக்கு சேகரித்தார்.


தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், தேனூர் ஊராட்சி 9-ஆவது வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் தனது மனைவி செல்விக்கு ஆதரவாக அவரது சின்னமான சாவியை மாலையாக அணிந்து அவரது கணவன் ஊர்காவலன் வாக்கு சேகரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...