வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட கட்டுமானப் பணி, பசுமை வீடுகள் திட்ட கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.கருப்பையா, சோழவந்தான் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அன்னக்களஞ்சியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கே.வி.வி.சி. குலோத்துங்கன், வட்டாட்சியர்கள் உஷா, கே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


