மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இலவசம், கட்டண டிக்கெட் எடுத்தவர்கள் என அனைத்து பக்தர்களும் அம்மன் சன்னிதியில் ஒரே இடத்தில் சமமாகத் தரிசிக்கும் முறை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் இலவசமாகவே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பக்தர்களின் வசதிக்காக ரூ.20, ரூ.100 கட்டண முறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கட்டண முறையில் தரிசிக்கவரும் பக்தர்கள் அம்மன் சன்னிதியில் இடது, வலது பக்கத்தில் இரு பிரிவாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், முக்கிய விருந்தினர்கள் தனியாக நின்று தரிசிக்கும் வசதியும் இருந்தது.
இந்த நிலையில், அனைத்துப் பக்தர்களும் ஒரே இடத்தில் நின்று அம்மனை அருகில் தரிசிக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டண தரிசனத்துக்கு வருவோரும், சிறப்பு விருந்தினர்களும் விரைந்து செல்லும் வகையில் வழிகள் இருந்தாலும், அம்மன் தரிசனத்தின்போது அவர்கள் பொது பாதையில் நின்றே தரிசனம் செய்ய முடியும்.
இப் புதிய முறை குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமனிடம் கேட்டபோது, இறைவன் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தற்போது அனைத்துப் பக்தர்களும் ஒரே இடத்தில் நிóன்று தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டண அடிப்படையில் தரிசிக்க வருவோர் விரைவாகச் சென்றாலும் பொதுவான இடத்தில் நின்றே தரிசிக்க முடியும் என்றார்.
புதிய தரிசன முறையானது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90 நிமிஷத்திற்குள் தோற்கடிக்க முடியாத அணி: 20 ஆண்டுகளாகத் தொடரும் நெதர்லாந்தின் கம்பீர சாதனை!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!




