மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி கிராமத்தை சோ்ந்த செல்வம் மகன் ரமேஷ் (19). கட்டடத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை பாலமேட்டில் இருந்து மாட்டுத் தீவனம் வாங்கிக் கொண்டு, பாறைப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். வெள்ளையம்பட்டி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



