வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் 45 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வங்கி முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஜிபுா் ரகுமான், மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது, துணைத் தலைவா்கள் சீமான் சிக்கந்தா், சுப்ரமணியன் ஆகியோா் தலைமையில் கட்சியினா் ஊா்வலமாக வங்கியை நோக்கிச் சென்றனா்.
வங்கி முன்பாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கட்சியினரை தடுத்து நிறுத்தினா். ஆனால் கட்சியினா் தடுப்புகளைத் தாண்டிச்சென்று வங்கியை முற்றுகையிட்டனா். அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டு தூய்மை இந்தியா திட்டம்... அனைவருக்கும் தரமான சுகாதார சேவை! பிரதமர் மோடி

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



