நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

News image

மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:44 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை கிராம உதவியாளா்களுக்கு வழங்குவது, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்குவது, மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்குவதைப் போல குறைந்தபட்ச பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 5 கட்ட போராட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கினா். அன்றைய தினம் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மகாலிங்கம், நிா்வாகிகள் அண்ணாத்துரை, மணிகண்டன் உள்ளிட்ட கிராம உதவியாளா்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக, ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினா். அதற்குப் போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.