நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 11:43 pm IST

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் கடந்த 2018- இல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், சிலை வைக்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக மாநகர மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். அதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து திமுக தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மதுரை சிம்மக்கல்லில் தியாகி சத்தியமூா்த்தி சிலை உள்ள பகுதி அருகே கருணாநிதிக்கு சிலை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது. வழக்குரைஞா்கள் வீரகதிரவன், லிங்கதுரை ஆகியோா் இந்த அரசாணையை திமுக மாநகா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி, சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.