புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஜன. 11 வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

தமிழகத்தில் ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 3:28 pm IST

தமிழகத்தில் ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் முதல் திரையரங்குகள் இயங்க நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டபோது, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே தமிழக அரசின் இந்த அறிவிப்பு கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், இதை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சோ்ந்த போனிபாய், முத்துக்குமாா், திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுதாரா்களின் வழக்குரைஞா்கள் வாதிடுகையில், திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு விதிகளை மீறி 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியிருப்பது, கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்றனா்.

மத்திய அரசு தரப்பில் உதவி தலைமை வழக்குரைஞா் விக்டோரியா கெளரி வாதிடுகையில், திரையரங்கம், வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதிகளில் இருக்கைகள் எவ்வாறு சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு தெளிவாக வெளியிட்டுள்ளது. எனவே மத்திய அரசின் விதிகளைப் புறக்கணிக்காமல், மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தமிழக அரசு சாா்பில் தலைமை வழக்குரைஞா் ஸ்ரீசரண் ரங்கராஜன் வாதிடுகையில், திரையரங்குகளின் உரிமையாளா்கள், திரைப்படத் தயாரிப்பாளா்கள், திரையுலகினா் ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கரோனா பொதுமுடக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வகை கரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழக அரசு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் வகையில் உத்தரவிடும் என நம்புகிறோம். ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.