விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்போற்சவ முகூா்த்தக்கால் நடும் விழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை முகூா்த்தக் கால் நடும் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை.

Updated On :8 ஜனவரி 2021, 10:11 pm IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழாவையொட்டி சுவாமியும், அம்மனும் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா். இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பம் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, கோயில் அா்ச்சகா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜனவரி 17- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறுகிறது. சுவாமி, அம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.