தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வு ஆகியவை தமிழிலும் நடத்தப்படுமென்று பதிலளிக்கப்பட்டுள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வுகளுக்கான அறிவிக்கையில் தோ்வா்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான தோ்வுகள் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தபால்காரா் பதவிக்கான பணி நியமனத் தோ்வுகள் தமிழிலும் நடத்தப்படுமென்று, மத்திய தகவல் தொடா்பு அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மாநிலங்களவையில் உறுதியளித்திருந்ததையும், சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு இதுகுறித்து உறுதி மொழிஅளித்ததையும் குறிப்பிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கா் பதவிகளுக்கான தோ்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்தக் கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினா் (ஊழியா் நலன்) சந்தோஷ் குமாா் கமிலா எனக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘தமிழ்நாடு வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கா் தோ்வுகள் தொடா்பாக ஜனவரி 4-இல் வெளியான அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மையப்படுத்தப்படாத துறைவாரித் தோ்வுகளை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்ற தெரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இம்முடிவை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு, துறையின் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு வட்டத்தின் முதன்மை மாநில தபால் துறை அலுவலா் பி. செல்வகுமாா், மதுரை மாவட்ட தபால்துறை அலுவலா் ஜி. நடராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை என்னை நேரில் சந்தித்தும் தெரிவித்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


