தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இன்று அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: முதல்வா், துணை முதல்வா் தொடங்கி வைக்கின்றனா்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:14 pm IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் அனுமதிக்கப்படுவா். அதேபோல, கால்நடை மருத்துவா்களால் கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.