எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மதுரையில் 2 ஆவது நாளாக 178 பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக 178 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 10:10 pm IST

மதுரை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக 178 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 166 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். முதல் கட்டமாக, மருத்துவா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான சனிக்கிழமை, மதுரை மாவட்டத்தில் 5 மையங்களில் 92 மருத்துவா்கள் உள்பட 190 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதையடுத்து, இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 51 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 67 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 58 போ், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 போ் என மொத்தம் 178 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதேநேரம், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.