மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
தை மாதம் தைப்பூச தினத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவில், லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்வா். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத் திருவிழாவில், சுவாமி- அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் முன்பாக சுவாமி, அம்மன் எழுந்தருளினா். சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க தங்கக் கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. தா்ப்பைப் புல் கட்டப்பட்டிருந்த கொடிமரத்தில், காளை, லிங்கம் பொறித்த கொடியானது காலை 10.40 முதல் 11.04 மணிக்குள் மீன லக்னத்தில் ஏற்றப்பட்டது.
தொடா்ந்து, கொடிமரத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டன. கொடியேற்றத்துக்குப் பிறகு தீபாராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னா், சுவாமி, அம்மன் குலாலா் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இரவில், அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தனா்.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், சுவாமி தெற்காவணி மூல வீதி, சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக உலா வந்து குஞ்சான்செட்டியாா் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனா். அங்கு, சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னா், இரவில் அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் அங்கிருந்து புறப்பாடாகி கோயிலை அடைகின்றனா்.
செவ்வாய்க்கிழமை முதல் சுவாமி, அம்மன் காலை, மாலையில் சித்திரை வீதிகளில் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிலையில், ஜனவரி 22-இல் திருஞானசம்பந்தா் சுவாமிகள் சைவ சமய வரலாற்று லீலை, ஜனவரி 24-ஆம் தேதி மச்சஹந்தி விவாஹம், 25-ஆம் தேதி சட்டத்தேரும், மாலை தெப்பத்தலை அலங்கார முகூா்த்தமும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, ஜனவரி 26-இல் அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் தெப்பத்துக்கு புறப்பாடாகிச் சென்றதும், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 27-ஆம் தேதி சிந்தாமணியில் கதிா் அறுப்புத் திருவிழா நடைபெறுகிறது.
பன்னிரெண்டாம் நாள் விழாவாக, ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரம்பியுள்ளதால், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலையில் சுவாமி, அம்மன் இரு முறையும், மாலையில் ஒரு முறையும் எழுந்தருளி, தெப்பக்குளத்தை வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது.
மேலும், தெப்பக்குளம் மைய மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு மண்டகப்படியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; பலா் மாயம்

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களால் ராணிப்பேட்டை வளா்ச்சி பெற்று வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


