அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

புதை சாக்கடைப் பணி: நாகை - நாகூர் சாலை போக்குவரத்து மாற்றம்

நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:48 pm IST

நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து ஆக. 23-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஐ.டி.ஐ பிள்ளையார் கோயிலிலிருந்து, வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா வரையிலான சாலையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணி ஆக. 23-ம் தேதி தொடங்கப்பட்டு, அக். 22-ம் தேதி வரை நடைபெறும்.

இதையொட்டி, ஆக. 23-ம் தேதி முதலான 2 மாத காலத்துக்கு நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்படுகிறது. நாகூர் வழியாக நாகை  வரும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வாஞ்சூரிலிருந்து கிழக்கு  கடற்கரை சாலை வழியே நாகைக்கு இயக்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நாகை புதிய  பேருந்து நிலையத்திலிருந்து நாகூர் வரை சிறப்பு நகரப் பேருந்துகள் இயக்கப்படும்  என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.